கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு 18.46 கோடியும் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

World Test Championship Final Prize Money

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship – WTC) இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை அறிவித்துள்ளது. இந்த முறை பரிசுத்தொகை முந்தைய பதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு, மொத்தம் 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 49.27 கோடி இந்திய ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் 15, 2025 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த பரிசுத்தொகை உயர்வு, டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கு ICC எடுத்துள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக தெரிகிறது.

பரிசுத்தொகை விவரங்கள்

வெற்றியாளர் அணி: இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 3.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 30.79 கோடி இந்திய ரூபாய்) பரிசுத்தொகையாகப் வழங்கப்படும். இது 2021 மற்றும் 2023 ஆண்டு இறுதிப்போட்டிகளில் வழங்கப்பட்ட 1.6 மில்லியன் டாலர்களை விட 125% அதிகமாகும்.

இரண்டாம் இடம் பெறும் அணி: இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணி 2.16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 18.47 கோடி இந்திய ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை எவ்வளவு? 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்த இந்திய அணிக்கு 480,000 டாலர்கள் × 85.53 = 41,054,400 இந்திய ரூபாய் (சுமார் 4.10 கோடி ரூபாய்). நான்காவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 380,000 டாலர்கள் × 85.53 = 32,501,400 இந்திய ரூபாய் (சுமார் 3.25 கோடி ரூபாய்) பரிசு தொகை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் இப்போதே எழுந்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்