சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம். சிங்கப்பூரில் மட்டும் 14,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதே தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இதனால், ஆசியாவின் மற்ற நாடுகளிலும் இதன் தாக்கம் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை கொரோனாவால் பாதிப்பு ஏற்படுகிறது. இது, வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
JN.1 தொற்றுகளின் தொடர்புடைய LF.7 மற்றும் NB.1.8 வகைகள் சிங்கப்பூரில் பரவி வருகின்றன. JN.1 மாறுபாட்டின் தொற்றுகள் இந்தியாவிலும் பதிவாகியுள்ளன, அவற்றில் 22 பேருக்கு இந்த தொற்று பதிவாகியுள்ளன. இந்த பாதிப்புகள் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.