ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!
தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து 16 பேரை மீட்டனர்.

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், நான்கு குடும்பங்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து பதினாறு பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்பொழுது, 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
3 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்ததோடு, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காயமடைந்தவர்கள் உஸ்மானியா, யசோதா (மலக்பேட்டை), டிஆர்டிஓ மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.