தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?
தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண்ராஜ் செயல்பட்டு வந்தார்.
தற்பொழுது, தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவைமத்திய நிதியமைச்சகம் ஏற்று கொண்டது. இந்த நிலையில், அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது பொதுச் செயலாளராக உள்ள ஆனந்த்க்கு செயல் தலைவர் பதவியும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அருண்ராஜ் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தவெகவை இழுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடவும் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025