ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

த.வெ.க தலைவர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் விழாவின் இரண்டாம் கட்டம் நாளை(ஜூன் 4) நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TVKVijay

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும் கட்சி தொண்டர்களும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், விஜய் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன, இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தவுடன் எழுந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று. பலரும் விஜய் எதாவது விவாகரத்துக்கு கண்டனம் தெரிவித்தால் முதலில் முழுவதுமாக அரசியல் களத்திற்கு வரட்டும் அதன்பிறகு பேசலாம் என்பது போல விமர்சனங்களை முன் வைத்தார்கள். இப்படியான சூழலில் தற்போது விஜய் இன்று முதல் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஏற்கனவே, தவெக-வின் முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜூன் 2025 முதல் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதைப்போலவே, தற்போது விஜய் இன்று முதல் முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2, 2025 அன்று முடிந்துவிட்டது. எனவே, இப்போது, திரைப்படங்களில் இருந்து முற்றிலும் விலகி, தவெக-வை வழிநடத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விஜய் தயாராகி கொண்டு இருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் நாளை (ஜூன் 04) 2ஆம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக வெற்றிக் கழகம் இந்த கல்வி விருது வழங்கும் விழாவை மூன்று கட்டங்களாக நடத்தி வருகிறது.

முதல் கட்ட விழா மே 30, 2025 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது, இதில் அறியலூர், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த விழாவின் இரண்டாம் கட்டம் ஜூன் 4, 2025 அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் நடிகர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்