இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 31 அன்று மதுரை சென்று, ஜூன் 1 அன்று உத்தங்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10:30 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. திமுகவின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்காக, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு மாவட்ட அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின், கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தொண்டர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, அதன் ஒரு பகுதியாக இந்தக் கூட்டத்தில், திமுகவின் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025