விமானம் விபத்து: ”அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” – தவெக சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி.!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தவெகவின் 3-வது கட்ட கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை : 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று 3ஆம் கட்டமாக பரிசு வழங்கிறார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தவெகவின் 3-ம் கட்ட கல்வி விருது விழா சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.
அடுத்த நொடிநிச்சயமில்லாத வாழ்க்கை எனவும், அந்த சம்பவத்தை நினைத்தாலே பதற்றமாக உள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். மேலும், ”என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம். 2026 தேர்தலை பற்றியும் பேச வேண்டாம்”. மாணவர்களும், பெற்றோர்களும் மேடையில் அதிக நேரம் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக கல்வி விருது விழாவில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது !
#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/5Xthkgjlyv
— 𝐒𝐀𝐑𝐀𝐍
(@itz_saran11) June 13, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025