மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 3டி வீடியோ பற்றி" 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 3டி வீடியோ வெளியீட்டை கடுமையாக விமர்சித்தார்.
அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக “கற்பனைக் காட்சிகளை” (3D வீடியோ) மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருப்பதாக வேதனை தெரிவித்த அவர், உள்துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேட்டதற்கு கற்பனைக் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதுமா? மதுரை வந்த உள்துறை அமைச்சர் ‘எய்ம்ஸ்’ என்ன ஆனது என சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்காக, இந்த கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?
இதற்கே 10 ஆண்டுகள்… https://t.co/EkZPaMq8Gu
— M.K.Stalin (@mkstalin) June 17, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025