இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் இரவு 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

rain news tamil

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் நீலகிரி, காட்மாண்டுப் பகுதிகள் அல்லது கோயம்புத்தூர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதை போல,  சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், இன்று (23-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (24-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்