அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!
இந்திரா காந்தியின் தைரியம் பாதியிருந்தால் மோடி அவைக்கு வந்து ட்ரம்ப் ஒரு பொய்யர் என்று சொல்லட்டு என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளித்து வருகின்றது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து சவால் விடுத்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25 முறை கூறியதாகவும், இதற்கு மோடி ஒரு முறை கூட பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ” இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என 29 முறை ட்ரம்ப் கூறிவிட்டார். இந்திரா காந்தியைப் போல மோடிக்கு தைரியம் இருந்தால், இந்த அவைக்கு வந்து ட்ரம்ப் ஒரு பொய்யர் எனக் கூறட்டும்.
பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ட்ரம்ப் உடன் விருந்து சாப்பிடுகிறார். பிரதமர் மோடி ட்ரம்பிடம் இதை கேட்க முடிந்ததா? இந்திய ராணுவத்திற்கு எந்த இழப்பும் இல்லை என பிரதமர் தைரியமாக கூறுவாரா? ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்புகொண்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.
1971ல் பாகிஸ்தான் உடனான போரில் அமெரிக்காவிடம் இருந்து மிரட்டல் வந்தபோது இந்தியா பணியவில்லை. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என பாகிஸ்தானிடமே அரசு தகவல் தெரிவித்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025