கிராமங்களில் உள்ள சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை – தமிழ்நாடு அரசு.!

கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

village - Pettishops

சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில், டீ கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை (ரூ.250 முதல் ரூ.50,000 வரை) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கிராமப்புற பஞ்சாயத்து சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சட்ட விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தளர்வு, கிராமப் பகுதிகளில் இயங்கும் சிறு மற்றும் குறு கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதில் மளிகைக் கடைகள், பொது வணிகக் கடைகள் மற்றும் சிறிய அளவிலான சில்லறை விற்பனைக் கடைகள் அடங்கும். இந்த முடிவு, கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சிறு வணிகர்களின் சுமையை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்