டெல்லி : இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் சிலர் மாறினாலும், இன்னமும் பலருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மீதுதான் தனி நம்பிக்கை இருக்கிறது என பலரும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வாங்கிவருகிறார்கள். எனவே, தினசரி ஆபீஸ், கல்லூரி மற்றும் சொந்த வேலைகளுக்காக 80,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல பெட்ரோல் ஸ்கூட்டரைத் தேடினால், மைலேஜில் மாஸ் காட்டும் மூன்று சிறந்த ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. அவைதான் யமஹா ரே இசட் ஆர் 125 ஹைபிரிட் (Yamaha RayZR 125 Fi Hybrid), டிவிஎஸ் ஜூபிடர் 110 (TVS Jupiter 110) மற்றும் ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125).

71.33 கிமீ, 61.2 கிமீ மற்றும் 60 கிமீ என மிரட்டலான மைலேஜ் தரும் இந்த மூன்று வண்டிகளின் விலை, மற்றும் சிறப்பம்சங்கள் நீங்கள் இந்த 3 வண்டியில் எந்த வண்டியை வாங்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

யமஹா ரே இசட் ஆர் 125 (Yamaha Ray ZR 125)

இந்த டாப் 3 கூட்டணியில் மைலேஜ் விஷயத்தில் அசைக்க முடியாத ராஜாவாக வலம் வருவது யமஹா ரே இசட் ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டர் ஆகும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.80,000 பட்ஜெட்டைச் சுற்றி அமைகிறது. ஸ்போர்ட்டியான லுக் மற்றும் லேசான எடையை விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பக்காவான வண்டியாகும்.

மைலேஜ் மற்றும் இன்ஜின் விபரங்கள் : இதில் 125cc ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் யமஹாவின் அதிநவீன 'ஹைபிரிட் சிஸ்டம்' (Hybrid System) கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வண்டியை முறுக்கி வேகம் எடுக்கும்போது, இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் இன்ஜினுக்கு கூடுதல் பவரை வழங்கி பெட்ரோல் செலவை பெருமளவில் குறைக்கிறது.

இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 71.33 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. வண்டியின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், கூட்ட நெரிசலான சிட்டி டிராஃபிக்கிலும் வளைத்து நெளித்து ஓட்டுவது மிக எளிது. இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டாப்-ஸ்டார்ட் போன்ற மாஸ் வசதிகளும் உள்ளன.

டிவிஎஸ் ஜூபிடர் 110 (TVS Jupiter 110)

டிவிஎஸ் ஜூபிடர் 110 முற்றிலும் மாறுபட்ட ஒரு யுக்தியைக் கொண்டுள்ளது. இது ஆடம்பர ஸ்போர்ட்ஸ் லுக்கிற்கு முக்கியத்துவம் தராமல், நடுத்தர குடும்பங்கள் சௌகரியமாகப் பயன்படுத்துவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை அதன் வேரியண்ட்டைப் பொறுத்து அமைகிறது.

மைலேஜ் மற்றும் இன்ஜின் விபரங்கள் : இதில் 110cc இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிட்டி சாலைகளில் மிகவும் ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தை வாரி வழங்குகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 61.2 கிலோமீட்டர் வரை சிறந்த மைலேஜ் வழங்குகிறது.

யமஹா அளவுக்கு 71 கிமீ தராவிட்டாலும், ஒரு ஃபேமிலி ஸ்கூட்டருக்கு இந்த 61 கிமீ மைலேஜ் என்பது மிகவும் லாபகரமான ஒன்றாகும். இதில் நீண்ட அகலமான சீட், வீட்டுச் சாமான்களை வைக்க தாராளமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ், மொபைல் சார்ஜ் செய்ய யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற அனைத்து அன்றாடத் தேவைக்கான வசதிகளும் கச்சிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125)

80,000 பட்ஜெட்டுக்குள் 125cc பெரிய இன்ஜின் திறனுடன், அதே சமயம் நல்ல மைலேஜும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சிறந்த சாய்ஸ் ஹீரோ டெஸ்டினி 125 ஆகும். இதனுடைய ஆரம்ப விலையும் எக்ஸ்-ஷோரூம் படி ரூ.80,000 பட்ஜெட்டிற்குள் கச்சிதமாகத் தொடங்குகிறது.

மைலேஜ் மற்றும் இன்ஜின் விபரங்கள் : இதில் சக்திவாய்ந்த 125cc இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளதால், சாதாரண 110cc வண்டிகளை விட கூடுதலான பிக்கப் மற்றும் வேகத்தை இது வழங்குகிறது. பெரிய இன்ஜின் என்றாலும், ஹீரோ நிறுவனத்தின் சிறந்த தொழில்நுட்பம் காரணமாக இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோமீட்டர் வரை கச்சிதமான மைலேஜ் தருகிறது.

குடும்பத்துடன் லாங் ரைடு செல்வதற்கும், மேடான சாலைகளில் அதிக எடையைச் சுமந்து செல்வதற்கும் இந்த வண்டியின் பவர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சொகுசான சீட்டிங் அமைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற வசதிகள் நிறைந்துள்ளன.

இந்த மூன்றில் யாருக்கு எது பெஸ்ட்?

80,000 பட்ஜெட்டில் இருக்கும் இந்த மூன்று வாகனங்களில் உங்களுடைய தேவைக்கு எது பெஸ்ட் என்று பார்ப்போம்.உங்களது ஒரே நோக்கம் அதிகப்படியான பெட்ரோல் சேமிப்பு மற்றும் அதிகபட்ச மைலேஜ் மட்டும்தான், அத்துடன் ஓட்டுவதற்கு லேசான எடையில் ஒரு மாடர்ன் ஸ்கூட்டர் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யமஹா ரே இசட் ஆர் 125 ஹைபிரிட் மாடலைத் தேர்வு செய்யலாம். இதுதான் இந்த கூட்டணியின் மைலேஜ் சாம்பியன்.

அதே சமயம், உங்களுக்கு மைலேஜுடன் சேர்த்து குடும்பத்தினர் அனைவரும் ஓட்டுவதற்கேற்ப நல்ல சொகுசான ரைடிங், அதிகப்படியான இடவசதி மற்றும் நம்பகமான ஃபேமிலி லுக் வேண்டும் என்று ஆசைப்பட்டால், உங்களுக்கு டிவிஎஸ் ஜூபிடர் 110 தான் மிகச்சிறந்த பெஸ்ட் சாய்ஸ்.

ஆனால், எனக்கு 110cc வண்டிகள் வேண்டாம், நல்ல பவர்ஃபுல்லான 125cc பெரிய இன்ஜின் வேண்டும், அதே சமயம் லிட்டருக்கு 60 கிமீ வரை நல்ல மைலேஜும், ஹீரோ பிராண்டின் குறைந்த பராமரிப்புச் செலவும் வேண்டும் என விரும்புபவர்கள் தாராளமாக ஹீரோ டெஸ்டினி 125 மாடலைத் தேர்வு செய்யலாம்.