டெல்லி : ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், இரண்டு புதிய அட்வென்ச்சர் (ADV) பைக்குகள் மற்றும் ஒரு கேஃபே ரேசர் (Cafe Racer) பைக்கை அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக்குகளின் வருகை, இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மூன்று பைக்குகளின் விலை, வெளியீட்டுத் காலம் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட விவரங்கள் பற்றி பார்ப்போம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 (Royal Enfield Himalayan 440)

ஏற்கனவே வெளிவந்து மக்களிடம் பிரபலமான ஹிமாலயன் 411 பைக்கின் வரிசையில், நடுத்தர பட்ஜெட்டில் கரடுமுரடான மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றவாறு இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்போது வெளிவரும்?: வரும் செப்டம்பர் 2026 மாதம் இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விவரம்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 2.50 லட்சம் அளவில் இருக்கக்கூடும்.

மைலேஜ் & எஞ்சின்: இதில் 443சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிட்டி மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களைச் சேர்த்து ஒரு லிட்டருக்குச் தோராயமாக 30 முதல் 35 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750)

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 750சிசி இன்ஜின் பிளாட்ஃபார்மில் உருவாகும் முதல் அட்வென்ச்சர் பைக் இதுவாகும். கடினமான ஆஃப்-ரோடு சாகசங்களை விட, நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் சௌகரியமாகப் பயணம் செய்ய விரும்புவோருக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்போது வெளிவரும்?: 2026-ன் இறுதி அல்லது 2027-ன் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விவரம்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 4.00 லட்சம் முதல் ரூ. 4.50 லட்சம் வரை இருக்கலாம்.

மைலேஜ் & சிறப்பம்சங்கள்: இதில் ரைடு-பை-வயர் (Ride-by-wire), க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. சக்திவாய்ந்த இந்த எஞ்சின் மூலம் நெடுஞ்சாலைகளில் தோராயமாக 20 முதல் 25 கி.மீ வரை மைலேஜ் பெறலாம்.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 750 (Royal Enfield Continental GT 750)

ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் ரேஸ் பிரியர்களைக் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டைலான கேஃபே ரேசர் (Cafe Racer) ரக பைக் இதுவாகும்.

எப்போது வெளிவரும்?: வரும் நவம்பர் அல்லது டிசம்பர் 2026 இறுதிக்குள் இந்தியச் சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விவரம்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 3.80 லட்சம் முதல் ரூ. 4.00 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். மைலேஜ் & விவரங்கள்: 750சிசி சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் பைக், தோராயமாக 18 முதல் 22 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.