டெல்லி : அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான மேட்டர் (Matter), இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக கியர் வசதி கொண்ட எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்த இந்நிறுவனம், தற்போது தனது அடுத்தகட்ட அதிரடி விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, தனது சமீபத்திய நிதி திரட்டல் சுற்றில் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 240 கோடி ரூபாய்) புதிய முதலீட்டை மேட்டர் நிறுவனம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இந்த புதிய மூலதனத்தைக் கொண்டு, அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் இந்தியச் சந்தையில் 4 புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய முதலீடு

மேட்டர் நிறுவனம் பெற்றுள்ள இந்த 240 கோடி ரூபாய் புதிய முதலீடானது, நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளர்களின் ஆதரவோடு திரட்டப்பட்டுள்ளது. இத்தொகையைக் கொண்டு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரிக்கவும், உதிரிபாகங்கள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும் வகையில், மேட்டர் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்கள் மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்குகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய நிதிச்சுற்றையும் சேர்த்து, மேட்டர் நிறுவனம் இதுவரை திரட்டியுள்ள மொத்த முதலீடு சுமார் 1,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் 750 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), நவீன உற்பத்தி ஆலைகளை அமைத்தல் மற்றும் சந்தை நுழைவுப் பணிகளுக்காக மட்டுமே நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4 புதிய எலக்ட்ரிக் பைக்குகள்

ஆட்டோகார் இந்தியா (Autocar India) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மேட்டர் நிறுவனம் அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் (12 - 24 மாதங்கள்) சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள 4 புதிய எலக்ட்ரிக் பைக்குகளும், தற்போது விற்பனையில் இருக்கும் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏரா (Aera) பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட உள்ளன.இந்த புதிய மாடல்கள் அனைத்தும் வெவ்வேறு தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், தனித்துவமான பிரிவுகளில் (Segments) வடிவமைக்கப்பட உள்ளன.

மிக முக்கியமாக, இந்த பைக்குகளில் பயன்படுத்தப்படும் பவர்டிரெய்ன் (Powertrain), பேட்டரி பேக் மற்றும் சாஃப்ட்வேர் சிஸ்டம் ஆகிய அனைத்தும் மேட்டர் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே சொந்தமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் என்பதால், இவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 பைக் எப்படி இருக்கும்?


பட்ஜெட் அல்லது சிட்டி கம்யூட்டர் பைக் (Budget / City Commuter Bike)

தினசரி அலுவலகம் மற்றும் கல்லூரி செல்பவர்களுக்காகக் குறைந்த விலையில் ஒரு அடிப்படை மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யலாம்.

லாங் ரேஞ்ச் க்ரூஸர் அல்லது டூரர் பைக் (Long Range / Tourer Bike)

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக அதிக மைலேஜ் தரும் வகையில் பெரிய பேட்டரி பேக் கொண்ட ஒரு மாடலை மேட்டர் நிறுவனம் களமிறக்கலாம்.

எதிர்பார்க்கும் மைலேஜ் (ரேஞ்ச்): இதில் 5 kWh அல்லது அதற்கும் அதிகமான திறன் கொண்ட பெரிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டால், சுமார் 180 முதல் 200 கி.மீ வரை மிகச் சிறந்த ரேஞ்ச் கிடைக்கலாம்.

எதிர்பார்க்கும் விலை: இந்த பிரீமியம் லாங் ரேஞ்ச் மாடலின் விலை சுமார் ரூ.2.லட்சம் முதல் ரூ.2.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக் (High-Performance Sports Bike)

தற்போது விற்பனையாகும் ஏரா 5000+ மாடலை விட, அதிக பிக்-அப் மற்றும் அதிக டாப் ஸ்பீடு (Top Speed) கொண்ட ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் பைக்காக இது உருவாகலாம்.

எதிர்பார்க்கும் மைலேஜ் (ரேஞ்ச்): ஸ்போர்ட்ஸ் மோடில் அதிக பவர் தேவைப்படும் என்பதால், இதன் ரேஞ்ச் சுமார் 130 முதல் 150 கி.மீ வரை இருக்கலாம்.

எதிர்பார்க்கும் விலை: கூடுதல் பவர் மற்றும் நவீன டிசைன் காரணமாக இதன் விலை ரூ.1.90 லட்சம் முதல் ரூ.2.05 லட்சம் வரை வர வாய்ப்புள்ளது.

அட்வென்ச்சர் அல்லது ஆஃப்-ரோடு பைக் (Adventure / Off-Road Bike)

கரடுமுரடான பாதைகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்றவாறு, உயரமான சஸ்பென்ஷன் மற்றும் ஆஃப்-ரோடு டயர்களுடன் கூடிய ஒரு அட்வென்ச்சர் மாடலையும் நிறுவனம் சோதிக்கலாம்.

எதிர்பார்க்கும் மைலேஜ் (ரேஞ்ச்): ஆஃப்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ப சுமார் 120 முதல் 140 கி.மீ வரையிலான ரேஞ்சை இதில் எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கும் விலை: இதன் அட்வென்ச்சர் வடிவமைப்பு காரணமாக இதன் விலை சுமார் ரூ.1.85 லட்சம் முதல் ரூ.1.95 லட்சம் வரை இருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் சந்தைப் போட்டி