சென்னை : பள்ளி, கோயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை குறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் " முதற்கட்டமாகப் பள்ளி, கோயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 கடைகள் வெற்றிகரமாக மூடப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக மற்ற கடைகளும் மூடப்படும் என்றும் அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை முதலமைச்சர் விஜயின் கவனத்திற்குத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும், மக்களின் நலனை முழுமையாகக் கருத்தில் கொண்டே டாஸ்மாக் விவகாரத்தில் இறுதி மற்றும் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.