சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூலை 21 முதல் 27 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்று வீசும் பகுதிகளிலும் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஜூலை 22: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 23: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.

ஜூலை 24: வட கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஜூலை 25: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

ஜூலை 26: கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.