சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று உயர்ந்திருந்த விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்குக் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.
இதற்கிடையே, வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235 என்ற விலையிலும், மொத்த வர்த்தகத்தில் பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,35,000 என்ற விலையிலும் எந்தவித மாற்றமின்றித் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.