மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மஹிஷடால் என்ற பகுதியிலிருந்து 32 வயதாகும் தேப்குமார் மெய்ட்டியை காவல்துறை கைது செய்தது. தேப்குமார் மெய்ட்டி என்பவர் பலமுறை சாராவை தொடர்புகொண்டு தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், காதலை ஏற்காவிட்டால் சாராவை கடத்தி விடுவேன் என்று அச்சுறுத்தல் விடுத்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர். மும்பையில் உள்ள பாந்தரா காவல் நிலையத்தில் மெய்ட்டி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக தேப்குமார் மெய்ட்டி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக […]
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த பலர், பணியாற்றுவதாகவும், அவர்கள், மத மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திருமலை கோவில் விதிமுறைகளின்படி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும். ஆனால், அந்த கோவிலில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன் அதிகாரப்பூர்வ காரில், தினமும், திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று […]
அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். விரல்களை மடக்கி ‘பாபா’முத்திரை காட்டும் ரஜினி, இதை அந்த படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில், மேடையில் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகம் முழுவவதும் உள்ள ரஜினி ரசிகர்களும், அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை, தயாரித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த முத்திரை, தங்கள் நிறுவனத்தின் லோகோ போலவே இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ […]
ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷுக்கு டெல்லி நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2000 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி இருந்தார். அப்போது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் குமார் விஷ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சதா, தீபக் பாஜ்பாய், ஆசுதோஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால், ஆசுதோஷ் உள்ளிட்டோரிடம் ரூ.10 கோடி […]
தற்போதைய நிலவரப்படி 34,332 புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை . இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றங் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து 332என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 47புள்ளிகள் உயர்ந்து 10ஆயிரத்து 606 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. லாபமீட்டும் எனக் கருதப்படும் பங்குகளைச் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க […]
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் . திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் […]
பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று அதிகாலையளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த தனியார் உணவக பாரில் தூங்கிக்கொண்டிருந்த, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தொடக்கத்தில் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஏர்டெல் * ரூ.448 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி * ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து […]
இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி முதல், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை […]
இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முதல் இடத்திலும், சென்னை அண்ணாநகர் K4 காவல்நிலையம் ஐந்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தகவல் கிடைத்துள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் முதல்வராக இருந்த ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 1990 முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலத்தில் […]
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திருப்பூர் எம்.பி சத்தியபாமா சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது ஏழை மற்றும் விவசாய குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் 12 சாலை மேம்பாலங்கள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க திருப்பூர் எம்.பி சத்தியபாமா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம்2017-18-ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. டந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகி தம் 7.1 சதவீதமாக இருந்தது. உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சரிவு கரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை […]
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 29 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் விமானத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அறிக்கையில் ,‘‘குறிப்பிட்ட தனியார் விமானங்களில் வழங்கப்படும் உணவு மிக மோசமாக உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். அதுபோலவே பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் மெனுவும் ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை மாற்றி வழங்க வேண்டியது […]
கடந்த 2016 -2017 கல்வியாண்டில் நாடுமுழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வி நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மொத்தம் 15 லட்சம் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் 85 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். போராசிரியர்கள் பற்றி […]
சட்ட விரோதமாக ரூ.8000 கோடி பணப்பரிவர்த்தனை செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இதனை தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அவர்கள் இருவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோசாங்காபாத்:மத்திய பிரதேசத்தின் இடார்ஸி என்ற பகுதிக்கு அருகே சரக்கு லாரியும் மற்றும் மினி லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் ஒருவர் இறந்தார்.மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்,இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் […]
நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லிமென்ட், லோக்சபாவில் நிறைவேறியது. இந்த சம்பள உயர்வின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.80 லட்சமாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ.90,000 த்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதால் மசோதா நிறைவேறாமல் போகும் பட்சத்தில் ஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என […]
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்கொண்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி பல காலமாக நிலவி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வயதினை […]