குல்பூஷன் ஜாதவ் தாயார், மனைவியை பாகிஸ்தான் இழிவுப்படுத்தியதற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜாதவ் தாயார், மனைவியை பாக். இழிவுபடுத்தியது இந்தியர்களை இழிவுபடுத்தியதற்கு சமம் என மாநிலங்களவை உறுப்பினரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களைவையில் தாக்கல் செய்த மசோதாவில் மூன்று முறை தலாக் எனக் கூறி முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கிறார். நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தல் வெற்றிக்கு பின் சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பின்போது பல அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை பற்றி பேசுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
தற்போது அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்கு ஆதார் கட்டயமாக்கபட்டு வருகிறது. இதனால் அதார் இதுவரை எடுக்காதவர்களும் அதார் எடுக்க முன்வந்து எடுத்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைகைதிகளுக்கும் அதார் எடுக்க வேண்டும் என கேரளா அரசு சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கேரளா டிஜிபி ஸ்ரீலேகா அளித்த பேட்டியில், ‘அனைத்து தரப்பு மக்களும் ஆதாருடன் இணைக்கபடுகின்றனர். அதுபோல், சிறை கைதிகளையும் அதார் திட்டத்தில் இணைக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளின் தகவல்கள் மற்றும் அடையாளங்களை பதிவு செய்யும் […]
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் அருகே ரேப்பூடி எனுமிடத்தில் பள்ளிக்கு சென்ற ஆட்டோ ஒன்றும் அரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. source : www.dinasuvadu.com
பாக்கிஸ்தானில் சிறைபிடிக்கபட்ட இந்திய உளவாளி குல்பூசன் சதாவை பார்க்க சென்ற அவரது மனைவியார் உள்ளே அனுமதிக்கப்படும் போது கடும் சோதனை செய்யப்பட்டு அவரது தாலியை கழட்ட சொல்லியும், அவரது காலனிகளில் சந்தேகப்படும் படி உலோக காலனி உள்ளதாகவும் கூறியது. இதற்க்கு இந்திய அரசு சார்பில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, இந்தய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்புஷன் சதாவை விடுவிக்க மத்திய அரசு உரிய […]
நாம் உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதில் பாதிக்கு மேல் போலியானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வருட தீபாவளிக்கு மட்டும் சுமார், ரூ.19,000 கோடிக்கு வர்த்தகம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நிறுவனங்கள் விழாகாலங்களில் மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. மற்ற நாட்களில் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியவில்லை என்பது குறித்து உத்திர பிரதேச போலிசாரின் உதவியுடன் ஓர் தனியார் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]
இந்த நடப்பாண்டின் முதற்கட்ட சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ.168.84 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சுமார் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் என அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பம்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பிதியடைந்துள்ளனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது அவர் மீது 16 குற்றப் பின்னணி வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை அனைத்தும் முந்தய மாநில அரசுகளால் தொடரப்பட்டவை அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து இப்போது அவரே உத்தரவிட்டுள்ளார். இப்போது யோகி ஆதித்தியநாத் ஒரு புனிதராகி விட்டார். அவரது ஆட்சிக்கால சாதனைகளில் முதலாவது திட்டம் இதுவாகத்தான் இருக்கும்.
பாகிஸ்தானுக்கு குல்பூஷணை பார்க்க சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும் வளையல், ஆகியவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தினர். ‘மகாபாரதத்தில் திரௌபதியின் துகிலுரிந்த நடவடிக்கை, போருக்கு வழிவகுத்தது. அதேபோன்று குல்பூஷ்ண் மனைவிக்கு நடந்த அவமதிப்புக்கு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்’ என்று சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்… sources; www.dinasuvadu.com
டெல்லி: இந்த சூழலில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைன் இவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக விழா காலங்களில் ரயில்வே கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது…!
ஓக்கி புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 661 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 400 தமிழக மீனவர்களும் மற்றும் 261 கேரள மீனவர்களும் காணவில்லை என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 362 மீனவர்கள் உட்பட 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. […]
பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக் கழகத்தில் 98 வயது நிரம்பிய ராஜ்குமார் வைஷ்யா நேற்று எம்.ஏ முதுகலை பட்டம் பெற்றார். மாநில ஆளுநர் ராஜ்குமாரின் இருக்கைக்கே வந்து அவருக்குரிய எம்.ஏ பட்டத்தை வழங்கினார். வாக்கர் உதவியுடன் நடக்கும் முதியவர் ராஜ்குமார் “இளைஞர்கள் மனம் தளராமல் முயன்றால் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் பெறலாம்” என்று அறிவுரை வழங்கினார்… source: www.dinasuvadu.com
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாகக் குருசாந்த் பட்டிதார் என்பவர் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பெருமையுடன் கூற வேண்டும் என்றும், பெற்றோர் யாரெனத் தெரியாதவர்களே மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அனந்தகுமார் ஹெக்டேயின் இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினரும் தலித் […]
வடக்கு கர்நாடகாவில் விவசாயிகள் அமைப்புகளால் இன்று பந்த்துக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.கர்நாடக மாநிலத்தில் கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவா-பெல்காமுக்கும் இடையே பஸ் சேவைகள் இயக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் காடாக் மற்றும் ஹுப்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காட்சி கிழே
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக விஜய் ருபானி (61) , துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 18 அமைச்சர்கள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தலைநகர் காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஜராத்தின் 16-வது முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார். இவருடன் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் […]
டெல்லி: தமிழக விவசாயத்தை மேம்படுத்த உலக வங்கியிடம் மத்திய அரசு கடனுதவி பெற 318 மில்லியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம் விவசாயம் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… sources: www.dinasuvadu.com
டெல்லி:மத்திய அரசு தேசிய விலங்காக புலியே தொடரும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய விலங்குகள் நல அமைச்சகம் இதை எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. தேசிய விலங்காக சிங்கம், பசுவை மாற்றக்கோரி எந்த ஒரு பரிந்துரைகளும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது… sources: www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம் : லக்னோ தலைநகரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள் மருத்துவர்கள் .இச்சிகிச்சைக்கு பின் தரையில் படுக்க வைத்ததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்… sources; www.dinasuvadu.com