நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்கள் முடிவில் பிஜேபி வெற்றிபெற்றது.இதனை தொடர்ந்து குஜராத் பாஜகவை சேர்ந்த விஜய் ருபானி முதல்வராக இன்று பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இவர் குஜராத் மாநில முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஸா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மும்பையில் திடீரென 17 மாடி கட்டிடத்தில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் சேதமடைந்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. source : www.dinasuvadu.com
80 வயதிலும் உத்திர பிரதேசத்தில் ஒரு மூதாட்டி துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகிறது. அந்த பெண்மணி பர்காஷி தோமர் என்பவர்தான். இவருக்கு 80 வயது ஆகிறது. இதனை பொருட்டு அந்த மூதாட்டியிடம் பேட்டி கண்டபோது, தான் 60 வயது முதல் துப்பாக்கி சுடுவதாகவும். எங்கள் கிராமத்தில் வரதட்சணை கொடுமை கிடையாது. ஏனென்றால் தான் சுட்டுவிடுவதாக பயபடுகிறார்கள் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், ‘என்னை யாரும் படிக்க வைக்க இல்லை. சின்ன […]
“பசு நமது தாய் போன்றது. பசுவை கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர் நிச்சயமாக கொல்லப்படுவார்.” என பேசியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ., (எமன்!) கயன் தேவ் அகுஜா. ஆனால் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியில் பசுக்களை கடத்திச் சென்றதாக கூறி ஜாகிர்கான் என்பவரை போலீஸ் கைது செய்தது. அதற்கு முன்னதாக ஜாகிர்கான் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்பதும் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மேற்சொன்னவாறு பதிலளித்துள்ளார் அந்த பிஜேபி எம்.எல்.ஏ.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்: பவானி காவேரி பாலாறு சரபங்கா தாமிரபரணி திருமணிமுத்தாறு வசிஸ்தா ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வெறும் 3 பரோட்டா மட்டும் தின்றால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பரோட்டா கொடுத்து, ரூ.1 லட்சம் சன்மானமும் கொடுகிறது டெல்ல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் உள்ள தபாஸ்யா பரோட்டா கடை. ரெம்ப சாதாரணமாக சொல்லிவிடலாம் 3 பரோட்டாதானே என்று. ஆனால் அதன் எடை 2 கிலோ உள்ளது. இந்த இராட்சத பரோட்டவைதான் 50 நிமிடத்திற்குள் விழுங்க வேண்டும்! இந்த பரோட்டாவின் விலை ரூ.400 மட்டுமே. இதேபோல், பரோட்டாக்கள் 180 ரூபாயிலிருந்து இறுகிறது. பலர் இந்த போட்டியில் இருவர் […]
பிரதமர் நரேந்திர மோடி தற்போது, புதிய மெட்ரோ ரயில்வே சேவையை தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில்வே சேவையானது, டெல்லியை அடுத்துள்ள நொய்டா முதல் கல்காஜி மந்திர் வரை செல்லும். இந்த மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். source : www.dinasuvadu.com
சேலத்தை சேர்ந்த செல்வம், சத்தியராஜ் ஆகியோர் செம்மர கடத்தல் கும்பலிடம் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர், தங்கள் ஊருக்குச் செல்ல நேற்று முன்தினம் இரவு சித்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, ஊர்காவல் படை வீரராக பணிபுரியும் மோகன்ரெட்டி அங்கு வந்துள்ளார். செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி செல்வம், சத்தியராஜை தமது கூட்டாளிகளுடன் ஆட்டோவில் மோகன்ரெட்டி கடத்தியுள்ளார். பின்னர், ரூ.2.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த உறவினர்கள், சித்தூர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, […]
நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு லோகோ உருவாக்குவதற்கான போட்டி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்தப்போட்டியில், கர்நாடகாவில் உள்ள நம்மூரைச் சேர்ந்த வினோத் குமாரின் குழு வெற்றி பெற்றது. இதையடுத்து டைபோகிராஃபி எனும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் பெங்களூருவில் உள்ள ‘உரு’ என்ற எழுத்து கன்னடத்திலும் BE U ஆகிய ஆங்கில எழுத்து சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Be U என்றால், நீ நீயாக இரு என்று பொருள்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை கர்நாடக […]
ரயில் கட்டணம் எல்லா நாட்களும் ஒரே விலையில் தான் இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது ரயில் கட்டணங்களை மாற்றி, ப்ரீமியம் தொகைக்கு விற்பது, சலுகைகள் அளிப்பது என மாற்ற மத்திய அரசு பரீசலித்து வருகிறது. தீபாவளி, துர்கா பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிகெட்டுகளை ப்ரீமியம் தொகைக்கு விற்பது, மற்ற நாட்களில் சாதாரண விலைக்கு விற்பது எனவும், பயணிகளுக்கு சலுகைகள் அளிப்பது போன்றவை குறித்து மத்திய ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. இந்த திட்டம் […]
ஆர்.கே.நகருடன் சேர்த்து, 4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் சிக்கந்த்ரா ((Sikandra)) தொகுதியிலும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் லிக்காபலி ((Likabali)) மற்றும் பக்கெ – கேசாங் ((Pakke-Kessang)) தொகுதிகளிலும் ஆளும் கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதேபோன்று மேற்கு வங்க மாநிலம் சபாங் ((Sabang)) தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில், அந்தந்த […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவி அங்குள்ள இளைஞர்களிடையே தீவிரவாதத்தை பரப்பி தீவிரவாதிகளாக இளைஞர்களை மாற்றி வருகின்றனர். ஏற்கனவே அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக ரயில் சேவை 50வது தடவையாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் 117 காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி உள்ளனர். இந்த தகவல் அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source : www.dinasuvadu.com
ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஈனாம் காம்பீரின் செல்போனை, டெல்லியில் இரண்டு மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். டெல்லி ரோகினி பகுதியில் வசித்து வரும் இவர் நேற்று முன் தினம் இரவு அருகில் உள்ள பூங்காவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், ஈனாம் காம்பீரிடம் வழி கேட்பது போல் நடித்துள்ளனர். ஐபோனை கையில் வைத்த படி அவர் வழி காண்பிக்கையில், ஐ.போனை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பினர். இருளாக இருந்ததால் இருசக்கர வாகனத்தின் […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..இன்று முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு 93 வது பிறந்த நாள் ஆகும் .. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. * வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி source: www.dinasuvadu.com
முத்தலாக் மசோதாவில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கூறியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சட்டவாரியத்தின் அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் சஜ்ஜாத் நோமனி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முத்தலாக் மசோதாவை வடிவமைக்கும் போது மத்திய அரசு சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய மசோதாவில் முத்தலாக் […]
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் சேவை பாதிப்பு; 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது 26 ரயில்கள் தாமதம், 6 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. source: www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம் ; காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் மற்றும் மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் என்று கூறினார், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு […]
டெல்லி; மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்றாம் கட்டமாகப் பணிகள் முடிக்கப்பட்டு பாதையில் ரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஏற்கெனவே 2 கட்டப் பணிகள் முடிக்கப்பட்டுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்கா முதல் கால்காஜி மந்திர் வரை பணிகள் முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நாளை தொடங்கிவைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]
ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார் எனவும் அதேபோல் மதவாத கட்சியான பாஜக ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதையும் ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது என ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இவற்றை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
தமிழகம் மட்டுமன்றி இன்று மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி,உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொகுதி மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் இரு தொகுதிகளிலும் மொத்தம் இந்தியா முழுமைக்கும் சுமார் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரனும், மேற்கு வங்கத்தின் சபாங்கில் திரிணாமுல் காங்கிரஸ்யின் கீதா புனியா,அதே போன்று உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.