ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஈனாம் காம்பீரின் செல்போனை, டெல்லியில் இரண்டு மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
டெல்லி ரோகினி பகுதியில் வசித்து வரும் இவர் நேற்று முன் தினம் இரவு அருகில் உள்ள பூங்காவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், ஈனாம் காம்பீரிடம் வழி கேட்பது போல் நடித்துள்ளனர். ஐபோனை கையில் வைத்த படி அவர் வழி காண்பிக்கையில், ஐ.போனை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பினர். இருளாக இருந்ததால் இருசக்கர வாகனத்தின் எண் தெரிய வில்லை என்று ஈனாம் காம்பீர் கூறி உள்ளார். அமெரிக்காவில் வாங்கப்பட்ட சிம் கார்டுடன் கூடிய இந்த ஐ போனில், சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரோகினி வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
source:www.dinasuvadu.com