இலங்கை:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில்,ஜனாதிபதி, பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார். அதன்பின்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.அதன்படி,அலி சப்ரியை புதிய நிதி அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும், புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,புதிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோவவையும் […]
தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டகாசம் கொடிகட்டி பறக்கிறது. இதனால்,ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று: மேலும்,”நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ,நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ,அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்” என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா.ஆனால் அதற்கு மாறான நிலைமை […]
தூத்துக்குடி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மருமகனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ கட்சியினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மறைந்த எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறுவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இந்திய […]
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]
விழுப்புரம்:கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடியில் 100 வீடுகளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்னர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். இதனிடையே,சமத்துவபுரத்தில் கலைஞர் பூங்கா,விளையாட்டு திடல் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த முதல்வர் வாலிபால் விளையாடினார்.தமிழகத்தில் […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு;58 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 913 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 795 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,839 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1280 பேர் கொரோனா […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்த உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா மரணம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா […]
இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இலங்கையில் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால்,பால்,அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்: இதன்காரணமாக,இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் […]
சென்னை:மாநகராட்சி பட்ஜெட் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம்(பட்ஜெட் தாக்கல்) சமர்பிப்பதற்கான கூட்டம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறுகிறது. மேலும்,பட்ஜெட் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில்,2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை […]
உத்தரகாண்ட்:டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற மூதாட்டி,காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 டோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் வைத்துள்ளார்.புஷ்பா முன்ஜியால்,டேராடூன் நீதிமன்றத்தில்,தனது சொத்துக்களின் உரிமையை நேற்று ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் […]
சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து […]
சென்னை:இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கு விற்பனை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. மீண்டும் உயர்வு: இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 […]
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் கோபம்: பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளன மற்றும் வாழ வழியில்லாத சூழல் மக்களிடையே வேதனையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்த கோபம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்,மாபெரும் போராட்டத்தை […]
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடியே 93 […]
சென்னை:பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் சௌந்தரராஜன்.இந்த நிலையில்,சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் நேற்று வெட்டிகொலை செய்யப்பட்டார்.பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்: இதனைத் […]
ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள் என்று யதி நரசிங்கானந்த் கருத்து. டெல்லி புராரி மைதானத்தில் நேற்று இந்து மகா பஞ்சாயத்து நடைபெற்றது.அப்போது,கூட்டத்தில் பேசிய தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 40 சதவீதம் பேர் […]
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1325 புள்ளிகள் உயர்ந்து 60,614 புள்ளிகளில் வணிகம் செய்யப்படுகிறது.அதைப்போல,தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 18,019 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றது. கச்சா எண்ணை விலை குறைவு காரணமாகவும்,ஆசிய சந்தைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தற்போது வர்த்தகம் செய்யப்படுகின்றது.
ஆந்திரா:ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அரசு,கடந்த ஜனவரியில்,ஏற்கனவே உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு,பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அழைத்தது. இதனையடுத்து,ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களில் இருந்து மேலும் 13 புதிய மாவட்டங்களை பிரித்து அரசிதழ் அறிவிப்பை […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு;13 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,096 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 913 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,044 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,316 பேர் கொரோனா […]