லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் 69 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினர். காவலர்கள், 8 கைதிகளை பிடித்தனர். சிலர் காரில் தப்பி ஓடி […]
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்களுக்கான, மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவ தரவரிசை பட்டியலில், 951 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் […]
தமிழக பாஜக தலைவர்கள் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்த முன்னாள் திமுக எம்.பி கே.பி.ராமலிங்கம். திமுக-வின் முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சென்னைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், திமுக-வின் […]
தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி பல மாவட்டங்களில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி இந்த […]
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு நீராதாரமாக விளங்க கூடிய முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த […]
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான […]
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பானது பாமரமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான பரிசோதனை […]
விமானத்திற்கு இணையான வேகத்தில் பறந்த ஜெட்மேன் விபத்தில் உயிரிழந்தார். ஜெட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் 36 வயதான வின்சென்ட், இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெட் பேக் அணிந்து கொண்டு மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில், வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான வான் சாகசங்களை நிகழ்த்தியுள்ள இவர், துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் செய்தது,இவரது சாகசங்களில் முக்கியமான ஒன்றாக […]
அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் தாங்கி வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சேர்ந்த 33 வயதான யோசுவா, இறந்தவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை செய்துக்க கொண்டிருக்கும் போது, வீட்டின் மீது ஏதோ ஒன்று பலத்த சப்தத்துடன் விழுந்ததுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் போல நான் என் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டின் மீது ஏதோ ஒன்று விழுந்தது. அதனால் வீடு அதிர்ந்த நிலையில், பெரிய மரம் தான் […]
ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த பத்தாம் வகுப்பு இளைஞன் உயிரிழப்பு. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்களை பார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே செல்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இந்த செல்போன் பல இளைஞர்களின் வாழ்க்கையில் பல விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறைகள் செல்பி எடுப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி ரயில் […]
3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி. ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி. இவர் ஏழு கண்டங்களுக்கு, 3 நாட்கள், 14 மணி நேரம், 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாக பயணித்துள்ளார். இவரது இந்த சாதனை பயணம் கின்னஸ் சாதனை படைக்க உதவி புரிந்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பயணத்தின்போது அவர் அமைதி 208 நாடுகளையும், அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் […]
பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்த திமுகவினர். பதிலடி கொடுத்த பாஜகவினர். அதிமுக மற்றும் திமுக இருவருமே மாறி, மாறி வார்த்தைகளால் தாக்கி கொள்வதுண்டு. ஆனால், தற்போது பாஜக மற்றும் திமுக இரு கட்சியினருக்கும் இடையே, ஒரு வித்தியாசமான மோதல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், திமுகவினர் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்திருந்தனர். திமுகவின் இந்த செயலுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாஜக […]
ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் இவர் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்திய தேன் விசாரணை முடிவில் இன்று ஹபீஸ் சையது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் […]
சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, எந்த மாநிலத்திலும் குற்றங்கள் குறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். அதேவேளையில் மாநில அரசுக்கு, இந்த அதிகாரத்தை வாபஸ் பெறுவதற்குஉரிமை உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்க்கு, மாநில அரசு ஒப்புதல் பெறாமலேயே எந்த மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்னவென்றால்,டெல்லி சிறப்பு காவல் […]
மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன். மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், வரும் 20-ம் தேதி மு.க.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, ‘மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், […]
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், சென்னைஉயர்நீதிமனறத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக, திருவண்ணாமலை கோவில் நிர்வாகம், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் […]
நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட […]
ஆந்திராவில், 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து மாநிலங்களிலும், அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. இவர்கள் அதிகமாகி தனியார் பள்ளிகளின் தான் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுண்டு. இந்நிலையில், ஆந்திராவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய […]
டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த டெல்லி முதல்வர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிற நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்க்கு தீர்வு காணும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வைரஸை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் துர்கா பூஜை தீபாவளி முதலிய பண்டிகைகளை மக்கள் கொண்டாடிய நிலையில் இந்த பண்டிகையின் போது மக்கள் […]