ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் […]
கொரோனா குறித்து இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் […]
கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை திறந்து வைத்தார். அதன்பின், பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்கு பறவைகள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன், கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார். CBI in one hand & ED in the other. Modi […]
வலுவான இந்திய தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ‘இரும்பு மனிதர்’. இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சரத்குமார் அவர்கள், வல்லபாய் படேலுக்கு வலது தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சிதறுண்டு கிடந்த சிறு நாடுகளை ஒருங்கிணைத்து வலுவான இந்திய தேசத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய இரும்புமனிதர் […]
ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், இணையத்தில் தான் உலா வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுகளினால், அவர்கள் தங்களது பணத்தை இழப்பதோடு, மன உளைச்சலினால், உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுமாறு பல தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் […]
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி. 1984-ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த திருமதி.இந்திராகாந்தி அவர்கள், மெய்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நாடு முழுவதும், இவரது 36-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நம் முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திஜீ அவர்களின் நினைவுதினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார். Tributes to […]
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது. இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பிரதர் மோடி படேலின் சிலைக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், அவரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், […]
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள, ‘ஏகன்’ தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பெரிய கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ள, இஸ்மியர் நகரம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இந்த […]
மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இதனை மக்கள் கடைபிடிப்பது இல்லை. […]
கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை முதலில் வெள்ளரிக்காய் […]
வானில் பறந்த பாராசூட்டின் கயிறு எதிர்பாராதவிதமாக அறுந்ததில் இருவர் பலி. கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்டீஸ் தீவுக்கு, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்த குடும்பத்தார் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில், பாராஷூட் விளையாட்டு நடந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாராசூட்டில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பாராஷூட்டின் கயிறு அறுந்த நிலையில் இருந்துள்ளது. அப்போது காற்று பலமாக வீச, மூவரையும் காற்று அங்கிருந்த பாறையில் வீசி அடித்துள்ளது. […]
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது, வந்தாலும் மாற்றம் ஏற்படாது. கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த அறிக்கை குறித்த விளக்கத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து கூறுகையில், ‘ஓய்வு தேவை என்பதால், ரஜினிகாந்த் […]
7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் ட்வீட். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வந்த நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 […]
ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘7.5 […]
சென்னையில் முக்கியமான இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள். கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது. அந்த அறிக்கை குறித்து, ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் […]
இன்று முதல் பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு. இந்தியா – சீனா இடையில் ஏற்பட்ட மோதலால், மத்திய அரசு இந்தியாவில், டிக்டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் இருந்து இந்த செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், செப்.2-ம் தேதி முதல், மத்திய அரசு பப்ஜி கேம் என்ற ஆன்லைன் கேம் உட்பட, 118 சீன செயலிகளுக்கு […]
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் விழாவானது, தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் தேவர் […]
மிலாதுன் நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சீனாவில் நோயாளியின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட 20 புழுக்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக சீனாவில், வான் என்ற ஒருவர் தனது கண்களில் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டே இருப்பது போல உணர்ந்துள்ளார். ஆனால், இது சோர்வின் நிமித்தம் ஏற்பட்டிருக்கக் கூடும் என நினைத்து அப்படியே விட்டு விட்டார். நாட்கள் செல்ல செல்ல கண்ணில் வலி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, ஜியாங்சு மாஹனத்தின் சுஜோ நகரத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வலது […]
மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய மருமகள். ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தீபக் – நிகிதா தம்பதியினர். தீபக்குடன் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், மாமியார் – மருமகள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், நேற்று முன்தினம் நிகிதாவின் கணவர் தீபக் வேலைக்கு சென்றுள்ளார். மாமனார் ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், நிகிதா மற்றும் ரேகா இருவருக்கும் […]