கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய்!

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய்.

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய்.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

வெள்ளரிக்காய் விதை

தயிர்

செய்முறை

முதலில் வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் தயிர் சேர்த்து, பசை போல செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் அந்த பேஸ்ட்டை, கருவளையம் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வந்தால், முப்பது நாட்களில் கருவளையம் நீங்கி விடும்.