திமுக தலைவர் பொறுப்புக்கு வரும் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், […]
திருவேற்காட்டில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜா முத்தெழில். இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளளது. அதாவது, அவர் மாணவிகளிடம் பாடம் நடத்துகையில், மாணவிகளின் கைகளை பிடித்து எழுதச்செய்வது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுளது. இந்த புகாரை மாணவிகள் பெற்றோரிடம் […]
திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் […]
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடியில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துளளார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக […]
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 4 முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் 30 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 300 பேர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் B.Ed முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் TET தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் […]
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர். புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி. புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது […]
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா நாட்டின் முதல் 100 சதேவீத எழுத்தறிவு பெற்ற பழங்குடி மாவட்டமாக மாறியுள்ளது பாஜக ஆட்சிபுரியும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஓர் பழங்குடியின மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள முதல் பழங்குடியின மாவட்டமாக மாறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டலா எனும் பழங்குடியின மாவட்டத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதனால், அம்மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக அறிவிக்கப்ட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலமாகவும் , […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடையது சென்னை மாநகராட்சி. 30 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் வழங்கல் பிரச்சனைகளை மக்கள் தொடர்புகொண்டு தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும். இந்த பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்துவிட்டாலோ, அல்லது வேறு சில காரணங்களாலோ பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிவிடும். இதனை கட்டுப்படுத்த தற்போது சென்னை மாநகராட்சி களத்தில் இப்போதே இறங்கிவிட்டது. வரும் திருவெற்றியூர் […]
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும். வரும் 8ஆம் தேதிக்குள் இவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் மற்றொருவர் போட்டியின்றி காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என நேரு குடும்பத்திற்கு மிகவும் […]
அமைச்சர் மெய்யநாதன், ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நல குறைவுக்கான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொண்டார். தற்போது பூரண குணமடைந்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன். இவர் அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல ரயில் பயணம் மேற்கொண்டார். அந்த சமயம் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக, இடையில் ரயில் நிறுத்தப்பட்டு, பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]
கேரளாவில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுகளை (அக்டோபர் 1) காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடங்கி வைத்தார். மாலையில், நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் […]
நான் ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளது பற்றி அவர் தான் கூற வேண்டும். என சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் தனது ஆதரவாளர்களை இன்று சசிகலா சென்னையில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, செய்தியாளர்கள், ஓபிஎஸ்-ஐ எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ‘ அதனை பற்றி அவர் தான் கூற வேண்டும். அதிமுகவில் பிரிந்தவர்கள் இரு அணி எல்லாம் ஒன்று தான். […]
ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். – என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார். கடந்த ஆக்ஸ்ட் மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சில் பிரதமர் பேசியதை அடுத்து, மத்திய […]
கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், […]
மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் விசிக, இடதுசாரிகள் மனு அளித்துள்ளனர். காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு , மதசார்பின்மையை வலியுறுத்தி சமய நல்லிணக்க மனிதசங்கிலி பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகள் என மூன்று கட்சியினரும் ஒன்றாக காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர் […]
மத்திய அரசிடம் கேட்டு பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். – வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறினார். வி.கே.சசிகலா தற்போது செய்தியாளர்களை சந்தித்து, தற்போதைய தமிழக அரசியல் சூழல் பற்றிய தனது கருத்துக்களை பதிவிட்டார். அப்போது அவர்பேசுகையில், ‘ தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. அதன் பின்னர் நடக்கும் அரசாங்கம் வேறு. ‘ என கூறினார். மேலும், ‘ […]
5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் […]
புதுசேரி மின்சாரதுறை தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டம் நடத்தினர். புதுசேரி மின்சாரத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முதற்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. அதற்கான வேலைகளை அரசு ஆரம்பித்ததும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக புதுசேரி மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதுச்சேரியில், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், […]
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள்ளது. பாகிஸ்தான் அரசின் முக்கிய அதிகாரபூர்வ செயல்பாடுகளை வெளியிடும் டிவிட்டர் தளம் GovtOfPakistan எனும் பக்கம் இருக்கிறது. இந்த பக்கம் மூலம் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை பாகிஸ்தான் அரசு வெளியிடும். ஆனால், இந்த அதிகாரபூர்வ பக்கம் தற்போது இந்தியாவில் உள்ள டிவிட்டர் பயனாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. GovtOfPakistan எனும் பக்த்தின் கீழ், சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.