எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. – டிவிட்டர் ஸ்பேசில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். வருடா வருடம் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக தமிழகத்தில் கொண்டப்பட்டு வருகிறது. நேற்று செப்டம்பர் 30 திராவிட மாடல் கடைசி நாள் என்பதால், முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ திராவிடம் தமிழகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. சமூக நீதியை நிலை […]
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, தமிழகத்தில் அடுத்து நிறைவேற்றபட உள்ள மத்திய அரசின் திட்டங்களை பற்றி கூறினார். அதில், வீடு தேடி குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு அனுமதி கொடுத்துள்ள்ளது. அதனால் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்த […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]
தமிழகத்தில் பாஜவுக்கு பணியும் அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு. தவறு செய்தால் வால் ஓட்ட நறுக்கப்படும் என திருமாவளவன் அண்மையில் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர், அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர். இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் […]
தற்போது வெளியான உச்சநீதிமன்ற உத்தரவின் படி, எங்களை இதுவரையில் ஸீரோ என்று கூறி கொண்டிருந்தவர்கள் முன்னாடி இப்பொது ஹீரோவாக மாறியுள்ளோம் என ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தனர். ஜூலை 11 பொது குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, வழக்கை வரும் நவம்பர் 21ஆம் […]
நாட்டில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருப்பதாக நிதின் கட்காரி கூறியதாக வெளியான கருத்துக்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’ என்று பேசியிருந்தார். அவர் மேலும் பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு இருக்கிறது. நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி […]
இன்று காலை மும்பை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காந்தி நகர் – மும்பை இடையேயான பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலின் கட்டமைப்பை பார்த்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, விமானத்தில் பயணம் செய்பவர்கள் […]
அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்திற்கு 30 கோடி செலவு செய்தார் என இபிஎஸ் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் மூர்த்தி பதில் கருத்தை தெரிவித்து உள்ளார். தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். சுமார் 50ஆயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தனர். அன்று விழாவில் மொய் கவுண்டர்கள் மட்டுமே 50 […]
மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டடத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தது.’ என கூறினார். பாஜக தலைவரின் இந்த கூற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]
ஓபிஎஸ் மேலுமுறையீடு செய்துள்ள அதிமுக பொதுக்குழு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உத்தரவை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. இந்த மேல்முறையீட்டு விசாரணையினை அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால் அந்த விடுமுறைகள் கழித்து விசாரணையை தொடங்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவி வகித்தார். அவருடைய பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து அந்த இடத்திற்கு புதிய நீதிபதியாக தற்போது முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஏற்கனவே உச்சநீதிமான்ற கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார். அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் […]
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சசிதரூர், திக் விஜயசிங் , மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் யார் யாரெல்லம் போட்டியிட உள்ளார் என்கிற எண்ணம் பலர் மனதில் எழுந்துள்ளது ஏற்கனவே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் போட்டியிட முயன்று, […]
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேரத்திலும் வரும் என மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதில், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்ததாக நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது , மதுரையில் வீட்டு வீடு […]
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை இன்று கர்நாடகாவில் தொடங்க உள்ள நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 20வது நாளை எட்டியுள்ளது. இன்று அவர் கர்நாடகாவில் இருந்து தனது யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த சமயத்தில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கையில், இஸ்லாமிய தொழுகை பாடல் ஒலிப்பதை கேட்டதும் தனது பேச்சை நிறுத்தி வைத்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை தொடங்கி, இன்று 20ஆம் நாளை எட்டியுள்ளார். நேற்று அவர் கேரள எல்லையை கடந்து தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியை வந்தடைந்தார். அங்கு, அவருக்கு, தமிழக மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு, மலைவாழ் மக்களிடம் அவர்கள் குறைகளை மனுவாக எழுதி […]
போலி ஆவணங்கள் வைத்து சிம் வாங்கினாலோ, வாட்டசாப், டெலிகிராம் போன்ற ஆப்களை பயன்படுத்தினாலோ 50 ஆயிரம் அபராதம் எனவும், அதனை கட்ட தவறினால் 1 வருடம் சிறை தண்டனை எனவும் மத்திய அரசு புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு புதியதாக இந்திய தொலைத்தொடர்பு 2022 மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள விதிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், போலி ஆவணங்கள் வைத்து சிம் கார்டு வாங்குவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி போலி ஆவணங்கள் வைத்து […]
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை முக்கிய ரயில் நிலையங்களில் தடுக்க, பிளாட்பார கட்டணத்தை உயர்த்தி […]
ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார் என திமுக அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து, இபிஎஸ் பேசுகையில்,’ இதற்கான பணம் உங்கள் பணம் இல்லை. மக்கள் பணம். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தனது கருத்தை பதிவிட்டார். இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைப்பது தான் […]
வேலை வாங்கி தருவதாக பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2011 – 2015 வரையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜி […]