ஒரு லட்சம் பட்ஜெட்டுக்கு 200 கிமீ மைலேஜ் ஸ்கூட்டர்...Ather Konark vs TVS Orbiter எது பெஸ்ட்?

Ather Konark 200KM வரை Range-ஐ இலக்காகக் கொண்டிருக்க, TVS Orbiter குறைந்த எடை மற்றும் 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது.

Hero Image

டெல்லி : இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை தற்போது மிக அதிவேகமாக மாறி வருகிறது. ஒரு நல்ல வசதியான இவி (EV) வண்டியை வாங்க வேண்டும் என்றால், இப்போது லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி வீச வேண்டிய அவசியம் இல்லை. நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்குள் கச்சிதமாக அடங்கும் வகையில் இரண்டு சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது சந்தையில் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

Ather Konark vs TVS Orbiter.webp

அவைதான், ஏத்தர் நிறுவனத்தின் புதிய வரவான ஏத்தர் கோனார்க் (Ather Konarc) மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter). இந்த இரண்டு வண்டிகளுமே ஆரம்ப விலையில் சுமார் 1 லட்சம் ரூபாய் பட்ஜெட்டைச் சுற்றி அமைந்திருந்தாலும், இவற்றின் வடிவமைப்பு, மைலேஜ் மற்றும் வசதிகள் முற்றிலும் வேறானவை. இவற்றைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

டிசைன்

ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர், வழக்கமான ஏத்தர் வண்டிகளை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய குடும்பக் குடும்ப தோற்றத்தைக் கொண்டுள்ளது. அகலமான ஒற்றை நீள சீட், தட்டையான ஃபுளோர் போர்டு, பின்னாடி அமருபவர்களுக்கான பேக்ரெஸ்ட் சப்போர்ட் மற்றும் உறுதியான மெட்டல் பாடி என நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய சக்கரங்கள் மற்றும் நீளமான வீல்பேஸ் இருப்பதால் சாலையில் செல்லும்போது நல்ல கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.

TVS Orbiter-1.webp

மறுபுறம், டிவிஎஸ் ஆர்பிட்டர் மிகவும் எளிமையான, வழக்கமான ஸ்கூட்டர் டிசைனைக் கொண்டுள்ளது. தினசரி வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ப கச்சிதமான தோற்றமும், நீளமான பிளாட் சீட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், இதன் சீட்டுக்கு அடியில் உள்ள 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதிதான். இதில் இரண்டு ஹெல்மெட்டுகளை அசால்ட்டாக வைக்க முடியும் என்பது குடும்பப் பயன்பாட்டிற்குப் பெரிய பிளஸ் ஆகும்.

பேட்டரி மற்றும் மைலேஜ்

மைலேஜ் விஷயத்தில் ஏத்தர் கோனார்க் கை ஓங்கி நிற்கிறது. இந்த ஸ்கூட்டர் 100 கிமீ, 125 கிமீ, 161 கிமீ மற்றும் அதிகபட்சமாக 200 கிமீ மைலேஜ் (IDC Range) தரும் பல்வேறு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது 125 கிமீ மற்றும் 161 கிமீ மாடல்கள் சில முக்கிய நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன, 200 கிமீ மாடல் விரைவில் வரவுள்ளது.டிவிஎஸ் ஆர்பிட்டர் இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது.

Ather Konarc Electric Scooter Launched.webp

இதன் வி1 (V1) வேரியண்ட் 1.8kWh பேட்டரியுடன் 86 கிமீ மைலேஜும், வி2 (V2) வேரியண்ட் 3.1kWh பேட்டரியுடன் 158 கிமீ மைலேஜும் (Claimed Range) தருகிறது. நிஜ உலகப் பயன்பாட்டில் (Real-World Range) டிவிஎஸ் ஆர்பிட்டர் வி2 மாடல் சுமார் 112 கிமீ மைலேஜ் தருவதாக சோதனைகளில் தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏத்தர் கோனார்க் தனது 'ட்ரூ ரேஞ்ச்' (TrueRange) கணக்குப்படி 125 கிமீ மாடலுக்கு 100 கிமீ நிஜ மைலேஜையும், 161 கிமீ மாடலுக்கு 130 கிமீ நிஜ மைலேஜையும் உறுதியாக வழங்குகிறது.

செயல்திறன்

ஏத்தர் கோனார்க் 4kW திறன் கொண்ட சக்திவாய்ந்த மோட்டாருடன் வருவதால், பிக்கப் மற்றும் வேகம் இரண்டிலுமே சிறப்பாகச் செயல்படுகிறது. இதன் எஸ்-லைன் மாடல் மணிக்கு 70 கிமீ வேகத்திலும், இஸட்-லைன் மாடல் மணிக்கு 80 கிமீ வேகத்திலும் செல்லக்கூடியவை. குடும்பத்தோடு பயணிக்கும் அதே நேரத்தில் நல்ல எலக்ட்ரிக் பவரையும் இது வாரி வழங்குகிறது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டர் பிஎல்டிசி (BLDC) மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இது அதிரடி பிக்கப்பிற்காக உருவாக்கப்படாமல், சிட்டி டிராஃபிக்கில் நிதானமாக ஓட்டுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்ட 6.8 நொடிகள் வரை எடுத்துக்கொள்கிறது. இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு 68 கிமீ ஆகும். நகர்ப்புறச் சாலைகளுக்கு இந்த வேகம் தாராளமாகப் போதுமானது.

வண்டியின் எடை

இந்த ஒரு விஷயத்தில் டிவிஎஸ் ஆர்பிட்டர், ஏத்தர் கோனார்க்கை விட மிகப்பெரிய அளவில் முந்துகிறது. டிவிஎஸ் ஆர்பிட்டரின் மொத்த எடை வெறும் 101 கிலோ மட்டுமே ஆனால், ஏத்தர் கோனார்க்கின் எடை சுமார் 129 கிலோவாக உள்ளது.

Ather Konark  TVS Orbiter.webp

வண்டியின் எடை குறைவாக இருக்கும்போது, கூட்ட நெரிசலான டிராஃபிக்கில் வளைத்து நெளித்து ஓட்டுவதும், குறுகிய பார்க்கிங் இடங்களில் வண்டியைத் திருப்பி நிறுத்துவதும் பெண்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். புதிதாக வண்டி பழகுபவர்களுக்கும் லேசான எடை கொண்ட ஆர்பிட்டர் பயமில்லாத நம்பிக்கையைத் தரும்.

வசதிகள் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஏத்தர் நிறுவனம் கில்லாடி. கோனார்க் ஸ்கூட்டரில் நேவிகேஷன், ஸ்மார்ட் அலர்ட்டுகள், மேஜிக் கீ (MagicKey), ஆட்டோபாப் (AutoPop) மற்றும் வண்டியை முன்னும் பின்னும் நகர்த்த உதவும் ஏர்வாக் (AirWalk) போன்ற எக்கச்சக்க மாடர்ன் வசதிகள் உள்ளன.

Ather Konark.webp

மேலும், இதன் புதிய பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பம் பேட்டரியை மிக விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது.டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டரிலும் க்ரூஸ் கன்ரோல் (Cruise Control), ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ஈகோ, சிட்டி போன்ற ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏத்தர் அளவிற்கு ஹைடெக் வசதிகள் இல்லை என்றாலும், அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்தும் இதில் உள்ளன.

உங்களுக்கு எது பெஸ்ட்?

உங்களுக்கு வண்டியின் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டும், டிராஃபிக்கில் எளிதாக ஓட்ட வேண்டும் மற்றும் சீட்டுக்கு அடியில் இரண்டு ஹெல்மெட் வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தான் முக்கியம் என்று நினைத்தால், நீங்கள் டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter) மாடலைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் ஓட்டுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த எளிமையான வண்டியாகும்.

ஆனால், உங்களுக்கு 150 முதல் 200 கிமீ வரை அதிகப்படியான மைலேஜ் ஆப்ஷன்கள் வேண்டும், வண்டி நல்ல பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் மற்றும் மேஜிக் கீ, ஏர்வாக் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு மாடர்ன் ஃபேமிலி இவி ஸ்கூட்டர் வேண்டும் என்று ஆசைப்பட்டால், உங்களுக்கு ஏத்தர் கோனார்க் (Ather Konarc) தான் தற்போதைய சந்தையில் மிகச்சிறந்த பெஸ்ட் சாய்ஸ்!

ஒரு லட்சம் பட்ஜெட்டுக்கு 200 கிமீ மைலேஜ் ஸ்கூட்டர்...Ather Konark vs TVS Orbiter எது பெஸ்ட்?