வெறும் ரூ.24,499 லிருந்தே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் 3 இதோ!

25,000 பட்ஜெட்டில் கிடைக்கும் Green Udaan, Green Sunny மற்றும் Komaki X-One எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, ரேஞ்ச், பேட்டரி, சார்ஜிங் நேரம் மற்றும் முக்கிய வசதிகளை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Hero Image

டெல்லி : இன்றைய காலகட்டத்தில் ஒரு புது டூ-வீலர் வாங்க வேண்டும் என்றாலே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிடுகிறது. இதனால், நடுத்தர மற்றும் எளிய மக்கள் புது வண்டி வாங்குவது ஒரு பெரிய கனவாகவே மாறிவருகிறது. ஆனால், உங்களுடைய பட்ஜெட் மிக மிகக் குறைவாக இருந்து, உள்ளூர் ஏரியா பயன்பாட்டிற்கு மட்டும் ஒரு எளிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடினால் சந்தையில் சில வியக்கத்தக்க ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

அந்த வரிசையில், வெறும் 25,000 ரூபாய் பட்ஜெட்டைச் சுற்றிக் கிடைக்கும் கிரீன் உதான் (Green Udaan), கிரீன் சன்னி (Green Sunny) மற்றும் சற்று கூடுதல் வசதிகள் கொண்ட கோமகி எக்ஸ்-ஒன் (Komaki X-One) ஆகிய மூன்று வண்டிகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம் .

கிரீன் உதான் (Green Udaan)

இந்திய இவி (EV) சந்தையிலேயே மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் இந்த கிரீன் உதான் முதன்மையானதாகும். இதனுடைய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.24,499 மட்டுமே,இதன் லாங்-ரேஞ்ச் மாடல் ரூ.26,499 விலையில் கிடைக்கிறது.

மைலேஜ் மற்றும் பேட்டரி விபரங்கள் : வாடிக்கையாளர்கள் வாங்கும் வேரியண்ட்டைப் பொறுத்து இது சிங்கிள் சார்ஜில் 30 கிமீ முதல் 60 கிமீ வரை மைலேஜ் (Claimed Range) வழங்குகிறது. இதன் டாப் மாடலில் 1.34 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு வெறும் 25 கிமீ மட்டுமே. இதனால், இந்த வண்டியை ஓட்டுவதற்குத் தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமமோ (Driving License) அல்லது ஆர்.டி.ஓ (RTO) பதிவோ தேவையில்லை என்பது எளிய மக்களுக்குப் பெரிய பிளஸ் ஆகும்.

Green Udaan.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

இந்த வண்டியில் 250W பிஎல்டிசி (BLDC) மோட்டார், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதிகள் உள்ளன. வண்டி அளவில் மிகவும் சிறியதாகவும், லேசான எடையுடனும் இருப்பதால், பார்க்கிங் செய்வதற்கும் டிராஃபிக்கில் கையாளுவதற்கும் பெண்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகும். இரவு நேரத்தில் வீட்டில் சார்ஜ் போட்டுக்கொண்டால் உள்ளூர் காய்கறி கடை, மளிகைக் கடை மற்றும் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் செல்ல இது கச்சிதமாக உதவும். இது தமிழ்நாட்டில் உள்ள கிரீன் இவி டீலர்களிடம் கிடைக்கிறது.

கிரீன் சன்னி (Green Sunny)

கிரீன் உதான் மாடலுக்கு அடுத்தபடியாக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றொரு மாடல் கிரீன் சன்னி ஆகும். இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 26,499 இல் இருந்து தொடங்குகிறது.

மைலேஜ் மற்றும் பேட்டரி விபரங்கள் : இதில் 1.34 kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். உதான் மாடலின் பேஸ் வேரியண்ட்டை விட இது சற்று கூடுதல் மைலேஜை வழங்குகிறது. இதனுடைய அதிகபட்ச வேகமும் மணிக்கு 25 கிமீ என்ற அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

green sunny electric scooter.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

பெரிய ஆடம்பரமான டிஜிட்டல் திரைகளோ அல்லது ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளோ இதில் இல்லை. மிக எளிமையான டிசைன், குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் மிகக் குறைந்த கொள்முதல் விலை ஆகியவையே இதன் பிளஸ் பாயிண்ட்டுகள் ஆகும். சீட்டுக்கு அடியில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியையும் வீட்டில் இருக்கும் சாதாரண சாக்கெட் மூலமாகவே 4 முதல் 6 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். தினசரி 10 முதல் 15 கிமீ மட்டுமே பயணிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த சிக்கனமான தேர்வாகும்.

கோமகி எக்ஸ்-ஒன்( Komaki X One)

இந்த ஒப்பீட்டில் மற்ற இரண்டு கிரீன் மாடல்களை விடவும் அதிக செயல்திறன் மற்றும் நவீன வசதிகள் கொண்ட ஒரு முழுமையான ஸ்கூட்டராக வலம் வருவது கோமகி எக்ஸ்-ஒன் ஆகும். இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலை அதன் பேட்டரி அமைப்பைப் பொறுத்து ரூ.34,999 முதல் ரூ.36,499 பட்ஜெட்டில் தொடங்குகிறது.

மைலேஜ் மற்றும் பேட்டரி விபரங்கள் : கோமகி நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் கிராபீன் (Graphene) மற்றும் லித்தியம் எனப் பலதரப்பட்ட பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது. இதனுடைய ஆரம்ப மாடல் சிங்கிள் சார்ஜில் 60 கிமீ மைலேஜ் தரும் நிலையில், இதனுடைய உயர்ரக வேரியண்ட்கள் 70 கிமீ முதல் 85 கிமீ வரை சிறப்பான மைலேஜை வாரி வழங்குகின்றன. இதன் ஆரம்ப மாடல் மணிக்கு 25 கிமீ வேகத்தில் வரும் நிலையில், டாப் மாடல்கள் கூடுதல் வேகத்திலும் கிடைக்கின்றன.

Komaki X One-1.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

தொழில்நுட்ப வசதிகளில் இந்த கோமகி எக்ஸ்-ஒன் மற்ற இரண்டையும் விட பலமடங்கு முன்னணியில் உள்ளது. இதில் ரிமோட் லாக்கிங் (Remote Locking), திருட்டைத் தடுக்கும் ஆன்டி-தெஃப்ட் அலாரம், மொபைல் சார்ஜிங் போர்ட், வண்டியின் பழுதைச் சுய பரிசோதனை செய்யும் செல்ஃப்-டயக்னாசிஸ், ரிப்பேர் ஸ்விட்ச், பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் (Reverse Assist) போன்ற எக்கச்சக்க பிரீமியம் வசதிகள் நிறைந்துள்ளன.

மேலும், இதில் ஈகோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ என மூன்று ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை 4 முதல் 5 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை உட்பட அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள கோமகி ஷோரூம்களில் இந்த வண்டி விற்பனைக்குக் கிடைக்கிறது.

வெறும் ரூ.24,499 லிருந்தே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் 3 இதோ!