வெயிட் கம்மி..மைலேஜும் தாறுமாறு! பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற குறைந்த எடை கொண்ட டாப் 5 ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதனுடைய விலை, எடை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : சிட்டியில் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணம் செய்வதற்கும், குறுகலான சந்து பொந்துகளில் எளிதாகத் திருப்பி ஓட்டிச் செல்வதற்கும் வெயிட் குறைவாக இருக்கக்கூடிய இருசக்கர வாகனம் மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாகப் பெண்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் அதிக எடைக் கொண்ட ஸ்கூட்டர்களைச் சமாளிப்பது, சிக்னல்களில் திடீரென்று பிரேக் பிடிக்கும்போதோ அல்லது வண்டியைத் திருப்பும்போதோ சற்று சிரமமாக இருக்கக்கூடும்.

எனவே, அதனால், வண்டியின் எடைக் குறைவாக இருப்பதும், இருக்கையின் உயரம் குறைவாக இருப்பதும் மிக அவசியமாகும். அப்போதுதான் உயரம் குறைவாக உள்ளவர்களும் கால்களைத் தாராளமாகத் தரையில் ஊன்றி, எந்தவித பயமும் இல்லாமல் நம்பிக்கையோடு வண்டியை இயக்க முடியும். இந்தியச் சந்தையில் பெண்களையும் இளசுகளையும் அதிகம் கவர்ந்து வரும் டாப் 5 இலகுரக ஸ்கூட்டர்கள் பற்றிய விவரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 (TVS Scooty Zest 110)

முதல்முறையாக வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களுக்கும், எடைக் குறைவான மற்றும் சுறுசுறுப்பான ஸ்கூட்டரைத் தேடுவோருக்கும் இது மிகச் சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டியின் மொத்த எடையே வெறும் 97 கிலோ மட்டும்தான். இதனால் பார்க்கிங் செய்வதோ அல்லது டிராஃபிக்கில் வண்டியைத் திருப்புவதோ மிகவும் எளிதாக இருக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள 109.7சிசி எஞ்சின் அருமையான பிக்கப் தருவதோடு, நகரத்திற்குள்ளான பயணங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இதன் இருக்கை உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதாக அமர்ந்து பயணிக்கலாம். சீட்டுக்கு அடியில் தேவையான அளவு பொருள் வைக்கும் இடமும், முன்பக்கத்தில் சிறிய பாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 71,000 முதல் ரூ. 75,000 வரை உள்ளதுடன், இது ஒரு லிட்டருக்கு தோராயமாக 48 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் தரும்.

ஹீரோ பிளெஷர் பிளஸ் (Hero Pleasure Plus)

குறைந்த பட்ஜெட்டில் ஸ்டைலான தோற்றத்துடன் தினசரி கல்லூரிப் பயன்பாட்டிற்கு வண்டி தேடும் மாணவிகளுக்கு இது ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். பார்ப்பதற்கு மிகவும் நவீனமாகவும் அதே சமயம் பாரம்பரியமான அழகியலையும் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர், ஒட்டுமொத்தமாக 104 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இதன் எஞ்சின் மிகவும் நம்பகமானதாகவும், குறைந்த பராமரிப்புச் செலவு கொண்டதாகவும் இருப்பதால் நடுத்தரக் குடும்பத்தினருக்கு எப்போதுமே இது ஒரு ஃபேவரைட் வாகனமாகும்.

முன்பக்க க்ளோவ் பாக்ஸுக்குள்ளேயே மொபைல் போன் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் (USB Charging Port) இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எந்த மூலையிலும் இதன் ஸ்பேர் பார்ட்ஸ் எளிதாகக் கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 70,000 முதல் ரூ. 77,000 வரை விற்கப்படுகிறது. இது ஒரு லிட்டருக்கு சுமார் 50 முதல் 53 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.

ஹோண்டா டியோ (Honda Dio)

இளைய தலைமுறையைக் காந்தம் போல ஈர்க்கும் ஆக்ரோஷமான மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்குச் பெயர்பெற்றது ஹோண்டா டியோ. இதன் கூர்மையான எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் வண்டிக்குச் செம மாஸான லுக்கைத் தரும். வண்டியின் எடையும் தோராயமாக 103 முதல் 105 கிலோ வரை மட்டுமே இருப்பதால் கையாள்வது மிக எளிது. பெட்ரோல் போட வேண்டுமென்றால் சீட்டைத் திறக்க வேண்டிய அவசியமில்லாமல், வெளியேவே பெட்ரோல் நிரப்பும் தொட்டி மூடி (External fuel-filler cap) கொடுக்கப்பட்டுள்ளது இதன் மிகப்பெரிய வசதியாகும்.

மேலும், ஆபத்தான நேரங்களில் வண்டியைச் சமமாக நிறுத்த உதவும் காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS) பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 74,000 முதல் ரூ. 80,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டருக்கு 48 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் தரும்.

யமஹா ஃபசினோ 125 எஃப்பி ஹைபிரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid)

பார்ப்பதற்கு மிகவும் அழகிய பிரீமியம் மற்றும் ரெட்ரோ (Retro) தோற்றத்துடன் வலம் வரும் இந்த ஸ்கூட்டர், பலரையும் தன் பக்கம் ஈர்க்கிறது. இதில் 125சிசி பவர்ஃபுல் எஞ்சின் கொடுக்கப்பட்டிருந்தாலும், இதன் மொத்த எடையை யமஹா நிறுவனம் வெறும் 99 கிலோவாக மட்டுமே வடிவமைத்துள்ளது வியப்புக்குரியது.

இதில் உள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) தொழில்நுட்பம் வண்டியை எந்தவித சத்தமும் இல்லாமல் சைலண்டாக ஸ்டார்ட் செய்ய உதவும். மேலும் இதில் உள்ள ஹைபிரிட் சிஸ்டம், வண்டியை முடுக்கும்போது (Acceleration) கூடுதல் பலத்தைக் கொடுத்து, டிராஃபிக்கில் அதிக மைலேஜ் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 77,000 முதல் ரூ. 96,000 வரை உள்ளது. கிளாசிக் தோற்றத்துடன் அதிக மைலேஜ் விரும்பும் பெண்களுக்கு இது செம சாய்ஸ். இது ஒரு லிட்டருக்கு சுமார் 58 முதல் 60 கி.மீ வரை மைலேஜ் வழங்கக்கூடியது.

சுசூகி அக்சஸ் 125 (Suzuki Access 125)

குடும்பத்தினருடன் சேர்ந்து பயணம் செய்வதற்கும், சற்று விசாலமான இடவசதியை விரும்புபவர்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் சுசூகி அக்சஸ் 125 ஆகும். இதன் எஞ்சின் மிகவும் லேசாகவும், சத்தமில்லாமல் இயங்கக் கூடியதாகவும் (Buttery-smooth engine) இருக்கும். வண்டியின் தரைப்பகுதி (Floorboard) மிகவும் அகலமாக இருப்பதால் கால்களை நீட்டி வசதியாக உட்காரலாம்.

மேலும் பெரிய அளவிலான மளிகைப் பைகளையும் சுலபமாக வைத்துக் கொள்ளலாம். இதன் எடையும் சுமார் 103 முதல் 104 கிலோ வரைதான் உள்ளது. பின்னால் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து பயணம் செய்தாலும், எஞ்சினுக்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் லகுவாகச் செல்லும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 82,000-லிருந்து தொடங்குகிறது. இது ஒரு லிட்டருக்கு 45 முதல் 48 கி.மீ வரை மைலேஜ் தரும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் நிறுவனத்தின் அடிப்படை எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலையாகும். நீங்கள் வண்டியை முழுமையாக வாங்கி ரோட்டில் இயக்க வேண்டுமென்றால், இதனுடன் மாநில அரச வரியான ஆர்டிஓ (RTO) கட்டணம், கட்டாய மூன்றாம் தரப்பு மற்றும் விரிவான காப்பீட்டுத் தொகை (Insurance) போன்றவைக் கூடுதலாகச் சேர்க்கப்படும்.

இதனால் நீங்கள் வசிக்கும் ஊரைப் பொறுத்து ஆன்-ரோடு விலை எக்ஸ்-ஷோரூம் விலையை விட தோராயமாக ரூ. 7,000 முதல் ரூ. 11,000 வரை கூடுதலாக வரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் தேவை, பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற சரியான ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

வெயிட் கம்மி..மைலேஜும் தாறுமாறு! பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்!