மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்த பில் கேட்ஸ்.!

மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோவை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஓட்டிப்பார்த்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோவை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஓட்டிப்பார்த்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார வாகனமான எலக்ட்ரிக் ஆட்டோவை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஓட்டிப்பார்த்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியாவிலுள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் இவர் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்துவிட்டு, தனது அனுபவத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, புதுமைகளை நோக்கி செல்லும் இந்தியர்களின் விருப்பம் எப்போதும் அசாத்தியமானது, நான் 4 பேர் செல்லக்கூடிய எலக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டினேன், இது சுற்றுசூழல் மற்றும் போக்குவரத்துக்கு துறையில் மாசு இல்லாமல் வாகனங்களை தயாரிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த முயற்சி என்னை ஈர்த்தது என்று கூறினார்.