மாருதி கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அதிரடியாக விலை உயர்வு.. எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபலமான கார்களின் விலையை 30,000 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

Hero Image

டெல்லி:இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பிரபலமான பல கார்களின் விலையை இந்த மாதம் (ஆகஸ்ட் 2026) முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு விலை உயர்ந்துள்ளது?

உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, கார்களின் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கார்களின் பட்டியல்

• பலேனோ (Baleno): ரூ. 30,000 வரை

• இ-விட்டாரா (e Vitara EV): ரூ. 20,000 வரை

• ஜிம்னி (Jimny): ரூ. 15,000 வரை

• விக்டோரிஸ் (Victoris) & இன்விக்டோ (Invicto): ரூ. 10,000 வரை

• எர்டிகா (Ertiga), ஃபிரான்க்ஸ் (Fronx) & XL6: ரூ. 7,500 வரை

• டிசையர் (Dzire) & டூர் எஸ் (Tour S): ரூ. 7,000 வரை

• ஸ்விஃப்ட் (Swift), பிரெஸ்ஸா (Brezza), கிராண்ட் விட்டாரா & ஈகோ (Eeco): ரூ. 5,000 வரை

• ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ & வேகன்ஆர்: ரூ. 2,500 வரை

பண்டிகை கால விற்பனையில் பாதிப்பு ஏற்படுமா?

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் தொடங்க உள்ளன. பொதுவாக இந்த நேரத்தில்தான் நடுத்தர மக்கள் அதிக அளவில் புதிய கார்களை வாங்குவார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் விலையை உயர்த்தியிருப்பது, மக்களின் பட்ஜெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், விற்பனையைத் தக்கவைக்கப் பண்டிகைக் காலங்களில் சிறப்புச் சலுகைகளை நிறுவனம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

மாருதி கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அதிரடியாக விலை உயர்வு.. எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?