#Breaking:இல்லத்தரசிகள் அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!

Chennai: Today, the price of 22 carat jewellery gold rose by Rs 320 per razor to Rs 36,472 per razor.

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஆனால்,தங்கம் விலையில்,நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.

அந்த வகையில்,சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,525-க்கு விற்பனை செய்யப்பட்டது.சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, ஒரு கிராம் ரூ.66.00-க்கு விற்பனையானது.

இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,559-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு அதிகரித்து,ஒரு கிராம் ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

#Breaking:இல்லத்தரசிகள் அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!