வீழ்ச்சியில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
சென்னை : நேற்றைய தினம் திடீர் உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று திடீரென குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (12.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705 க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,280 ஆகவும், கிராமுக்கு ரூ.7,160 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.91.50க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.91,500க்கு விற்கப்படுகிறது.