வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மளமளவென்று குறைந்துள்ளது.
இன்றயை தினம் (11-11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கும் விற்பனையாகிறது. அக். 31ம் தேதி வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, நவ.1 முதல் படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,725க்கும், சவரனுக்கு ரூ. 61,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025