புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,320 ஆகவும், கிராமுக்கு ரூ.7,415 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும், 1 சவரன் தங்கம் ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,320 ஆகவும், கிராமுக்கு ரூ.7,415 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு அதிகரித்து ரூ.98க்கும், 1 கிலோ 500 உயர்ந்து ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது