திடீர் உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி ஏற்றம் கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (06.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.