மீண்டும் ரூ.55,000ஐ நோக்கி.. தங்கம் விலை கிடுகிடு உயர்வு.!
தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55,000ஐ நோக்கி செல்வதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.960 உயர்ந்துள்ளது. மீண்டும் ரூ.55,000ஐ நோக்கி செல்வதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (13.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.54,600-க்கும், கிராமுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை ரூ.3.50 காசுகள் உயர்ந்து கிராமுக்கு ரூ.95-க்கும், கிலோவுக்கு ரூ.3,500 உயர்ந்து, ரூ.95,000க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ .5,000 அதிகரித்துள்ளது.