தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு...!விபரம் இதோ..!

Rising prices of construction materials in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக,கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் வருகின்ற ஜூன் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு மூட்டை சிமெண்ட்டின் முந்தைய விலை ரூ.350 ஆக இருந்தது.ஆனால்,தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது.

அதைப் போன்று,ஒரு டன் ஸ்டீல் கம்பியின் முந்தைய விலை ரூ.58,000 இருந்தது.தற்போது ஒரு டன் ரூ.75,000 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு யூனிட் மணல் ரூ.3800 ஆக இருந்தது.தற்போது ரூ.5200 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு யூனிட் ஜல்லியின் முந்தைய விலை ரூ.3,500 ஆகும்.ஆனால்,தற்போது ரூ.5,000 உயர்ந்துள்ளது.

ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ஒரு  லோடு செங்கல் ரூ.27 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு,திடீரென கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்ததால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.