நீண்ட நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை – வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி!

Sale of petrol and diesel at the same price for a long time - a little relief for motorists!

சென்னை:இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால், பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

ஆனால்,தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகின்றன.

அந்த வகையில்,சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில்,இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 36 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மேற்கொண்டு அதிகரிக்காமல் வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.