சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.7,000 தொட்டது.!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,640 ஆகவும், கிராமுக்கு ரூ.7,455 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது.
1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.20 உயர்ந்து ரூ.7,000ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.56,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும்.
மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,640 ஆகவும், கிராமுக்கு ரூ.7,455 ஆகவும் விற்பனையாகிறது.