சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்ததையடுத்து, தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,040-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.80-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1800 அதிகரித்து ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.