gold price [META AI ]
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர் தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,930க்கு விற்பனையாகிறது. விரைவில் இது ரூ.8000-ஐ தொடலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.63,240க்கு விற்பனையான நிலையில், இன்று வரலாறு காணாத புதிய உச்சமாக ரூ.63,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,192-க்கும், ஒரு சவரன் ரூ.8,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…