மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI தனி ஆப் வெளியிடப்பட்டதாக அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” புதிய Meta AI ஆப் இன்று வெளியாகிறது! Meta AI ஆனது எங்கள் புதிய Llama 4 மொழி மாதிரியால் இயக்கப்படுகிறது. இது OpenAI, Google, Deepseek, மற்றும் Anthropic ஆகியவற்றின் சமீபத்திய AI மாடல்களுக்கு இணையாக […]
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ் போகவில்லை எனவும் சிலர் புகைப்படங்கள் அனுப்பும் போது இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் ஸ்டேட்டஸ் (Status) பதிவிட முடியவில்லை என்றும் புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த சிக்கல் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல பயனர்களை பாதித்துள்ளது. இந்த சிக்கல் மாலை 5 மணி முதல் (IST) தொடங்கியதாகவும், உலகளவில் பல நாடுகளில் […]
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பான ஆப்கள் தான் அதிகம் இருக்கும். இருந்தும் சில சமயம் பாதுகாப்பு குறைபாடு உள்ள, சில விஷமதனமான வேலைகளை செய்யும் ஆப்கள் இருக்கும். அதனை அவ்வப்போது கூகுள் கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றிவிடும். அப்படியான செயல்முறை தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது, பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களுக்கு விரும்பத்தகாத […]
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். […]
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக போஸ்ட் (ட்வீட்) செய்ய முடியாது, தகவல்களைப் பெற முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பயனர்கள் எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை ட்ரெண்ட் செய்து சீக்கிரம் சரி […]
டெல்லி : எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட்டரை (எக்ஸ்) வாங்கியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, தற்போது அதிகமாக வளர்ச்சி அடைந்து வரும் AI தொழில் நுட்பத்தையும் எக்ஸ் வலைத்தளத்திற்குள் க்ரோக் என்கிற பெயரில் கொண்டு வந்தார். முதற்கட்டமாக க்ரோக் 1 என்கிற முதல் மாடலை 2023 நவம்பர் மாதம் கொன்டு வந்தார். அந்த மாடல் செயல்பாட்டில் இருந்த போது மற்ற AI தொழில் நுட்பங்கள் கொடுக்கும் தகவல், […]
சென்னை : இந்தியாவில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக இருந்த ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்கிற தளமாக உருவாகியுள்ளது. எனவே, இதற்கு முன்பு இரண்டு தளங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பானதோ அது அனைத்துமே இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தளத்தில் என்னென்ன விலைக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்பது பற்றி விவரமும் வெளிவந்து இருக்கிறது. அது பற்றி விவரமாக பார்ப்போம். ஜியோ […]
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன உலகில் சமூக மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இது எம்மாதிரியான மாற்றம் என்பது அவரவரின் மன சுதந்திரத்தை பொறுத்து புரிந்துகொள்ளும் எண்ணமும் மாறுபடுகிறது. இந்த நவீன மாற்றத்திற்கு உதாரணமாக தற்போது வெளியான ஒரு செயலியின் ஆய்வு அறிக்கை பார்ப்போருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ( Happily ever after ) எனும் […]
சென்னை : நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி அசத்தலான அப்டேட்டுகளை மெட்டா நிர்வாகம் வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இன்ஸ்டாகிராமில் Schedule செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து இப்போது ரீல்ஸ் அதிகமாக செய்து வெளியிடும் பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதனை வெளியிடலாம் என்கிற […]
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை இன்னுமே மக்கள் அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்பதற்காக வாட்சப் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால், எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வாட்சப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி கொள்ளும் வசதிக்கு அனுமதி கேட்டு தேசிய கார்ப்பரேஷனுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இதற்கு முன்னதாக, இந்தியா முழுவதும் 10 கோடி பயனர்களுக்கு மட்டுமே பயன்பாடு […]
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளவும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், இருக்கும் பெரிய தலைவலியான விஷயமே நாம் ஆர்வமாக எதாவது பார்த்துக்கொண்டிருந்தோம் என்றால் இடையில் திடீரென எதாவது விளம்பரம் வரும். அதனை பார்க்கும்போது அய்யோ நடுவில் இது வேற வருகிறதே என நமக்கு அந்த வீடியோ பார்க்கும் ஆர்வமும் கூட போய்விடும். விளம்பர பிரச்சனை இல்லாமல் வீடியோக்களை பார்க்கவேண்டும் […]
மும்பை : பலரும் உபயோகம் செய்து வரும் இன்ஸ்டாவில் அடிக்கடி நல்ல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளலாம் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் காதல் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால், நமக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் அன்று சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்றால் சில சமயங்களில் துக்கம் வந்து உறங்கிவிடுவோம். இதனால் நம்மளுடைய பிறந்த […]
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து விடும் என்கிற அளவுக்கு மெட்டா நிறுவனமானது அடிக்கடி பல அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து வருகிறது. இப்படியான அப்டேட்டுகளை கொண்டுவருவதன் மூலம் இன்ஸ்டாகிராம் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்னுமே மக்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யாதவர்களையும் ஆப்பிற்குள் கொண்டு வர […]
டெல்லி : ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் தளங்களில் ஒன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar). இந்த ஓடிடி தளத்திற்கு இணையாக ஒரு ஓடிடி தளம் கொண்டு வரவேண்டும் எனத் திட்டமிட்டு அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) என்ற ஓடிடி தளத்தைக் கொண்டு வந்தது. அதில் பல சீரிஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியைக் கொண்டு வந்து முன்னணி ஓடிடி நிறுவனமாகவும் வளர்ந்தது. […]
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை கொண்டு வந்து பயனர்களை மெட்டா கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் AI தொழிநுட்பம் வசதியைக் கொண்டு வந்தது. அதன்பிறகு, நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு பார்ப்பவர்கள் லைக்குகள் போடும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது நமது சேட்டிங்கை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு அதனைத் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற வகையில் வசதி ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் […]
ஜெர்மனி : தற்போதைய ஸ்மார்ட் உலகில் , நாம் பாதுகாப்பானது என நினைத்து செல்போன் வாயிலாகவும், செல்போன் வைத்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசினால் கூட சில சமயங்களில் நமது பேச்சுக்கள் செல்போன் மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்கப்படுகிறது. இதன் மூலம் பல சமயம் நாம் பேசிக்கொண்ட விஷயம் நாம் தேடும் சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரமாக வந்து சேர்வதை கவனித்திருபோம். சில சமயங்களில் செல்போன் கேமிராக்கள் கூட சில செயலிகள் மூலம் தவறாக கையாளப்படுகின்றன. இப்படி […]
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நாம் கேள்விபட்டிக்கொண்டு இருக்கிறோம். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், பணமோசடி செய்யும் வகையில், வரும் நம்பர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியைக் பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, இனிமேல் BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி […]
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ஒருவர் ஸ்டேட்டஸ் வைக்கிறார் என்றால் அவருடைய ஸ்டேட்டஸ் நமக்குப் பிடித்திருந்தது என்றால் லைக் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறொரு, அட்டகாசமான வாட்ஸ்அப் அப்டேட்டை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால் அதுவும் ஸ்டேட்டஸ் […]
சென்னை : கடந்த 2016-ம் ஆண்டில் ஜியோ நிறுவனம் உருவெடுத்த போது இலவச இன்டர்நெட்டில் தொடங்கி அதன் பிறகு குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் மற்றும் குறைந்த விலையில் அளவில்லாத இன்டர்நெட் என அறிமுகப்படுத்தி நம்மை அதற்கு பழக்கப்படுத்தியது. ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் ஜியோ தனது பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனது. தற்போது, சமீபத்தில் கூட ஜியோ தனது சிம்கார்ட்டுக்கான கட்டணத்தை உயர்த்தியது. இதில், பல ஜியோ வாடிக்கையாளர்கள் […]