திருமணம் மீறிய உறவுகள்? 30 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்த கிளீடன் செயலி!
பிரபல டேட்டிங் செயலியான கிளீடன் (Gleedan) எனும் செயலியை 3 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன உலகில் சமூக மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இது எம்மாதிரியான மாற்றம் என்பது அவரவரின் மன சுதந்திரத்தை பொறுத்து புரிந்துகொள்ளும் எண்ணமும் மாறுபடுகிறது.
இந்த நவீன மாற்றத்திற்கு உதாரணமாக தற்போது வெளியான ஒரு செயலியின் ஆய்வு அறிக்கை பார்ப்போருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ( Happily ever after ) எனும் டேக் லைனோடு உள்ள கிளீடன் (Gleeden) எனும் செயலி முந்தைய ஆண்டை காட்டிலும் 2024-ல் 270% வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்த கிளீடன் செயலியானது தனியாக இருப்பவர்கள், திருமணமானவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், ஓரினசேர்க்கையாளர் என அனைவருக்குமான ஒரு டேட்டிங் செயலி என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பெண் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என சமீபத்திய அறிக்கை வெளிக்காட்டியுள்ளது.
அந்த செயலி நிறுவனத்தினர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தற்போது வரை இந்த கிளீடன் செயலியை சுமார் 3 மில்லியன் பயனர்கள் (30 லட்சம்) பதிவிறக்கம் செய்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பீடு செய்கையில் 270% வளர்ச்சியை இந்த செயலி கண்டுள்ளது. இதில் பெண் பயனர்களின் எண்ணிக்கை 128%ஆக உள்ளது.
இந்த செயலியை பயன்படுத்துவதில் பெண்கள் 58% பேர் ஆவார். இந்த செயலியை பயன்படுத்துவதில் 40% பேர் தினமும் 45 நிமிடங்கள் உபயோகம் செய்கின்றனர் என செயலி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்செயலியை அதிகம் பயன்படுத்துவோர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இந்த செயலியை பயன்படுத்துவதில் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களே முன்னணியில் உள்ளனர். பெங்களூரு (20%), மும்பை (19%), கொல்கத்தா (18% ) மற்றும் டெல்லி (15%) என அடுத்தடுத்த லிஸ்டில் அந்தந்த நகரங்கள் உள்ளன. போபால், வதோதரா, கொச்சி போன்ற சிறிய நகரங்களில் இந்த செயலியின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது Gleeden செயலி 3 மில்லியன் பயனர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்த வருடம் இந்த செயலியை 5 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்நோக்கி கிளீடன் செயலி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவுக்கான க்ளீடன் செயலி மேலாளர் சிபில் ஷிடெல் கூறுகையில், ” இந்தியா எப்போதுமே கிளீடனுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது, 3 மில்லியன் பயனர்களின் பதிவிறக்க எண்ணிக்கையானது வளர்ச்சியடைந்து வரும் உணர்வுகளுக்கு ஒரு சான்றாகும். பெண் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இன்றைய உலகில் பாதுகாப்பு, விவேகம் மற்றும் நமது ஜோடியை தேர்வு செய்யும் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025