“டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது? அண்ணாமலை கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mk stalin annamalai

சென்னை :கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருந்தார். இந்த சூழலில், அவர் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டது குறித்தும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தற்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது” என கூறியுள்ளார்.

unknown node

மற்றோரு பதிவில் ” சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் திமுக, விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நிறுவனங்களிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அண்ணாமலை தன்னுடைய கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

unknown node