பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதனால், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளதாகவும், தனது குடும்பத்தார், தனது ஊழியர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும்’ அந்த பதிவில் தெரிவித்துள்ளார். T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital […]
டெல்லியில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,921 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,921 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 87,692 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 79.05 சதவீதமாக அதிகரித்தது. மேலும், […]
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2.46 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே […]
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது என தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சுங்கத்துறை அதிகாரிகள் இந்தபார்சலை ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் […]
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூருவில் ஜூலை 14 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என […]
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அளித்த பேட்டியில், எல்லையில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைய தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் அந்த இடத்தில் நமது வீரர்கள் இருந்தனர். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு உள்ள இரும்பு வேலி வழியாக நுழைய முயன்ற […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 488 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா நெறிமுறையை மீறி கேரளாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும், சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதை அனுமதிக்க முடியாது. […]
குணமடைந்தவர்களின் விகிதம் மேலும் 62.78% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 822,603 பேருக்கு கொரோனா பாதிப்பு. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 516,206 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது உள்ள நோயாளிகளில் […]
உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார்.ஆனால் சமீப காலமாக கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் அம்பானியின் செல்வாக்கும் சரிந்தது.இதனால் ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தியாவை பொருத்தவரை கொரோனா காலத்தில் பெரும் நிறுவனங்கள் கடும் […]
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தை கணக்கில் கொண்டு இயங்கிய சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை தற்பொழுது மாற்றப்பட்டு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், அனைத்து போக்குவரத்துக்கு சம்மந்தப்பட்ட துறைகளும் மூடப்பட்டிருந்தது. அண்மை காலங்களாக கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் அடிப்படையில், இந்தியாவில் சில சிறப்பு ரயில்கள் இயங்கி வந்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை மாற்றி இந்திய ரயில்வே அமைப்பு தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை ரயில் எண் 02303-ஹவுரா சிறப்பு (பாட்னா […]
ஆசிரமத்தில் தங்கியிருந்த 10-14 வயதுக்குட்டப்பட்ட 10 மைனர் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் மற்றும் நலன்புரி மேம்பாட்டு அமைச்சகத்தின் நோடல் ஏஜென்சியான சைல்ட் லைனுக்கு மர்மநபர் ஒருவர் தொலைப்பேசியில் அழைப்பு விடுத்து ஆசிரமம் ஒன்றில் குழந்தைகள் சிலர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். அதனையடுத்து உடனடியாக சைல்ட் லைனை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஆசிரமத்துக்கு சென்று பார்த்து சந்தேகமடைந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி திரிபுரா […]
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசத்யாகிராஹி’ என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். ஆசியாவில் மிகப்பெரிய சோலார் திட்டம் என கூறி மத்திய பிரதேசத்தில் ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டத்தினை பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 750 மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளியிலிருந்த பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் […]
9 போலீஸ் அதிகாரிகளிள் இடமாற்றம் உத்தரவை ரத்து செய்த அடுத்த மூன்று நாளில் மீண்டும் அதே பதவியில் 8 போலீஸ் அதிகாரிகளை தாக்கரே இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மகாராஷ்டிரா முதலமைச்சரான உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள 9 துணை போலீஸ் கமிஷனர்களின்(டி. சி. பி) இடமாற்றங்களை ரத்து செய்துள்ளார் . அதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த 9 டி. சி. பி-களில் ஒருவரை தவிர்த்து 8 பேரை அதே பதவியில் தாக்கரே இடமாற்றம் செய்துள்ளார். ஒரே வாரத்தில் […]
டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில், டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். மேலும், அந்தந்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் […]
டிக்டாக் உட்பட 59 செயலிகள், அரசு அறிவித்துள்ள 79 கேள்விகளுக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, […]
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 37 வயதான பத்திரிகையாளர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து அந்த பத்திரிகையாளர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் நாராயண் அபெக்ஸ் உடனடியாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உத்தரவிட்டார். பத்திரிகையாளர் தற்கொலை குறித்து ஆராய […]
அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுதமேந்திய தீவரவாதிகள் இருப்பதைப் பற்றிய உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, இன்று அதிகாலை அசாம் ரைபிள் படையினர் மற்றும் அருணாச்சல பிரதேச காவல் துறையினரும் திராப் மாவட்டத்தில் உள்ள கொன்சாவில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள் . அப்போழுது அதிகாலை 4:30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள என்.எஸ்.சி.என் அமைப்பின் தீவரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் அசாம் ரைபிள்ஸ் […]
பிளாஸ்மா தானம் செய்த டெல்லி மக்களை நினைத்து நான் பெருமைப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,09,140 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது […]
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது.இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றினார்.அவரது உரையில் ,கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உற்பத்தி,வேலை வாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது.நிதி அமைப்பை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலார்கள் வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்து வருகிறார்கள், மேலும் பலர் நடந்தே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது, மேலும் இதுவரை 4,611 சிறப்பு ரயில்கள் மூலம் 63.07 லட்சம் பேர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர், மேலும் சிறப்பு ரயில்கள் […]