திமுகவும் அமமுகவும் ஒன்றாக உள்ளனர் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என்று அமமுகவின் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுகவும் அமமுகவும் ஒன்றாக உள்ளனர்.இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.
22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,தற்போதைய ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாக உள்ளது. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் .விவசாய நிலங்களில் செல்லும் உயர்அழுத்த மின் கோபுரங்கள் சாலையோரங்களில் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு வந்திருக்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறுகையில்,தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறுதான்.தனி மாநில கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ் மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசியதாக கருதுகிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு வந்திருக்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை தமிழக அரசு வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஜாக்டோ […]
பிரதம மந்திரியின் தூய்மை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகராட்சி மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் மின்கலத்திலான சிறிய 54 குப்பை அள்ளும் வண்டிகள் கொண்டு வரப்பட்டு விரைவில் மண்டலங்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.திருநெல்வேலி மாநகராட்சி காலம் மாற்றம் ஏற்படுவதற்கு தகுந்து மாற்றம் அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பைகள், கழிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு […]
88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒட்டபிடாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், 88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை .ஒட்டபிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கப்படும்.எங்களை பற்றி குறை சொல்லியே ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியாது என்று […]
கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன் பின் பெண் அதிகாரி மற்றும் அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ,மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து […]
திண்ணைகளில் அமர்ந்து மக்கள் குறையை கேட்கும் ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்த போதே செய்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓட்டபிடாரம் தொகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசுகையில்,தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இப்போது திண்ணைகளில் அமர்ந்து மக்கள் குறையை கேட்கும் ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்த போதே செய்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்த்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் […]
குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி […]
சில தினங்களுக்கு முன்னர், தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கோயம்புத்தூரில் உள்ள மார்டினிக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு காசாளாராக இருந்த பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விசாரணை முடிந்து மறுநாள் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் வருத்தமடைந்த காசாளர் பழனிச்சாமியின் மகன் ரோஹிண் குமார், உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், தனது […]
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் […]
அதிமுக ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் […]
அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ […]
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு அளித்துள்ளார். அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதனால் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் […]
தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் ,தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு தனிச் சேனல் தொடங்கப்படும்.இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் […]
மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிப்பதுபோல் குறை கூறுகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அனுப்பானடி பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போதுஅவர்பேசுகையில்,தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .மத்தியில் அங்கம் வகித்தபோது தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்க திமுக வழிவகை செய்யவில்லை. மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிப்பதுபோல் குறை கூறுகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் சேர 50 ஆயிரம் மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனர் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறுகையில்,பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனர்.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டுள்ளதால், அந்த மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
3 எம்எல்ஏ-க்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. சூலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சூலூர் பகுதியின் நீராதார பிரச்சனைகளுக்கு […]