திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் !அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் !தினகரன் அணியின் தங்கதமிழ்செல்வன் தகவல்

அதிமுக  ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக  ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

unknown node

இந்த நிலையில் இன்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.அதிமுக  ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம்.ஆனால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம், அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் முதல் பணி என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.