அவசரமாக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய நினைப்பது அதிமுகவின் பயத்தை காட்டுகிறது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஐயப்ப பக்தர்கள் காவிவேட்டி கட்டுவார்கள். ஆனால் ஓபிஎஸ் காவி வேட்டி கட்டியது மோடி சாமிக்காகவே .அவசரமாக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் […]
தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில்,இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வருகிறார்.3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு நேரத்தில் திமுக தான் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தியது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் 23–ந் தேதி தெரிந்து விடும். அன்று மோடி வீட்டுக்கு போவது போல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார் என்றும், ஜாடிக்கு ஏற்ற […]
அமைச்சர் ஜெயக்குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்லித்தான், கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக திமுக வட்டாரங்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்றும், தேர்தலுக்கு பின்பாக திமுக கட்சி கைமாறி, மு.க.அழகிரி தலைவராக பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தான் தலைவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,4 தொகுதி இடைத்தேர்தல் விளையாட்டிற்கு காயாக மக்களை அரசியல்வாதிகள் நகர்த்துகிறார்கள். பல கட்சிகள் பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் அவர்களுடையது அல்ல. தலைவர்களை தேடாதீர்கள். நீங்கள் தான் தலைவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை திட்டமிட்டு தடுக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை திட்டமிட்டு தடுக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் நோக்குடன் தேர்தலை தடுக்கிறார். மாநில தேர்தல் ஆணையமே தானாக முன்வந்து தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், உரிமைகளை பறிகொடுப்பது ஆட்சியல்ல. எதிர்காலத்திற்கு தேவையான உரிமைகளை பாதுகாப்பதே சிறந்த ஆட்சி. திராவிடக் கட்சிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே நாம் தமிழர் தனித்து போட்டி. நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். குழம்பிப் போயிருப்பது தமிழக எதிர்க்கட்சிகள் தான் .தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக, முடிந்த போதெல்லாம் சொல்லியும், வருங்காலங்களில் செய்தும் காட்டப்போகிறோம் என்பதுதான் எங்கள் கட்சியின் பலம் என்றும், மாற்றத்துக்கான விதையை தூவும் நல்ல நேரம் இது. மழை இல்லாத நேரம்தான் என்றாலும், இந்த விதை வேர் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் […]
தலப்பாகட்டி பிரியாணி நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பல இடங்களில் பிரியாணி கடைகள் உள்ளது. இதனால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தங்களது உணவகமான தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று தலப்பாகட்டி உணவகத்தின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபலமான […]
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே குடிசை வீடு ஒன்று தீ பிடித்து எரிந்ததால் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி அம்பாள் (வயது 83) வீட்டில் உள்ளே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் பெறமுடியவில்லை. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் ” காசு இல்லனா யாரும் மதிக்க மாட்றாங்க.” என்று பதிவிட்டு விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், மன்சூருக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இவரது தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் கணேஷ் என்பவரின் தோட்டத்தில் போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து புகாரின் பெயரில் கோவை எஸ்.பி. சுஜித் குமார் தலைமையிலான காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்தது காவல்த்துறை.மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் […]
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அணி ஒரு பாண்டவர் அணி. எனவே, பாண்டவர் அணியை, சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், திமுகவும், அமமுகவும் குழப்பத்தில் உள்ளது என்றும், எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சகுனியும் துரியோதனன் கும்பலும் தான் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது. மே 23ஆம் தேதிக்கு பிறகு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளம் நேதாஜி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுய நினைவு அற்ற நிலையில் இருந்த ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டதுதான், அதிமுகவின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இதன் மூலம், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவையும் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் முடிவு வந்தவுடன் மத்தியில் மோடி […]
பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக […]
முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சி மாற்றம் வரும் என வீதி, வீதியாக புலம்பிக் கொண்டு வருகிறார் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன ஜோதிடரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், கட்சி மாறி செயல்படும் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் சசிகலா அணியில்தான் நாங்கள் உள்ளோம் என்று எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் பின்னர் எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறுகையில்,சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். […]